இந்து பூசாரி கொலை: குற்றவாளியைப் பிடிக்க மனைவி வேண்டுகோள்
லண்டன்:
இங்கிலாந்தின் லீ செஸ்டர் நகரில் புதன்கிழமை கொல்லப்பட்ட இந்து புரோகிதரின்மனைவி, கொலையாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுக்க வேண்டும்என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு, 42 வயதான புரோகிதர், ஹரீஷ் புரோஹித், தனது வீட்டில்ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்தார். குற்றத்தை மறைப்பதற்காக குற்றவாளிகள்வீட்டுக்கும் தீவைத்துக் கொளுத்தினர். ஹரீஷ், புரோகிதர்கள் சங்கத் தலைவராகவும்இருந்து வந்தார்.
இந்த நிலையில், ஹரீஷைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க அவரது மனைவிவழக்கறிஞர் அஞ்சனா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறுகையில், ஹரீஷின்ஆத்மா சாந்தியடைய வேண்டும். அவரை இழந்து நான் தவிக்கிறேன். அவரைக்கொன்றவர்களைப் பிடிக்க என்னாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராகஉள்ளேன்.
7 ஆண்டுக்கு முன்பு ஒரு விழாவில் அவரைச் சந்தித்தேன். மிகவும் மகிழ்ச்சியாகவாழ்ந்து வந்தோம். அவரை இழந்து நான் தவிக்கிறேன். இருப்பினும் மனஉறுதியுடனேயே இருக்கிறேன்.
எனது கணவர் மிகவும் மென்மையானவர். எப்போதும் சீரியசாக இல்லாமல்,வடிக்கையாகவும், சிரித்த முகத்துடனும் இருப்பவர்.
அனைவராலும் விரும்பப்பட்டவர்.
இங்கிலாந்திலுள்ள புரோகிதர்களுள் அதிகம் விரும்பப்பட்டவர். திருமணம் செய்துகொள்ளப் போகும் தம்பதிகள் அவரை 2 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வளவு பிசியாக இருந்தவர். மதிக்கப்பட்டவர் என்றார்அஞ்சனா.
இதற்கிடையே, ஹரீஷ், மிகவும் கூரிய ஆயுதத்தால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றுபோலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், கொலை செய்தவர், ஹரீஷுக்குத்தெரிந்தவராகவே இருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஏனென்றால்,வீட்டின் கதவோ அல்லது வேறு பொருட்களோ உடைக்கப்படவில்லை. வீட்டில் எந்தசேதமும் இல்லை.
ஹரீஷின் இறந்த உடலை, அவரது தந்தை கரூன் சங்கர், தம்பி ஜெய் பிரகாஷ் ஆகியோர்தான் முதலில் பார்த்தனர். ஹரீஷ் குடும்பத்தினரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,ஹரீஷ் மிகவும் கொடுமையாகக் கொல்லப்பட்டுள்ளார். காஸ் சிலிண்டரைத் திறந்துவிட்டு வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. வீட்டின் பின் கதவு வழியாக குற்றவாளிவந்திருக்கலாம் என்று தெரிகிறது.
இந்தக் கொலை யார் செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஹரீஷ் மிகவும்மென்மையானவர். யாருக்கும் தீங்கு நினைக்காதவர். பிறரைப் புண்படுத்தும் விதத்தில்பேச மாட்டார் என்றார்.
இந்தக் கொலை இன ரீதீயாக இல்லாமல், தனிப்பட்ட காரணங்களுக்காகநடந்திருக்கலாம் என்றும் போலீஸ் சந்தேகிக்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications