"21 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை
சென்னை:
தி.மு.க ஆட்சியில் 21 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு ஒருகோடியே 90 லட்ச ரூபாய் காப்புத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழகஅரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள் கிழமை தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:
மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்க முதல்வர் கருணாநிதி 30 லட்சரூபாய் காப்புத் தொகை வழங்கினார்.
கவிஞர் முடியரசன், மயிலை சீனி. வேங்கடசாமி, சாமி சிதம்பரனார் ஆகியதமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும் என்றும், ஒவ்வொருதமிழறிஞரின் நூல்களுக்கும் 10 லட்சம் ரூபாய் என்று மொத்தம் 30 லட்சம் ரூபாய்,அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதிஅறிவித்திருந்தார்.
அதையொட்டி, மூன்று தமிழறிஞர்களின் நூல்களையும் நாட்டுடைமையாக்கிமொத்தம் 30 லட்சம் ரூபாய் காப்பு நிதியாக வழங்கி அரசு ஆணையிட்டது.
முதல்வர் திங்கள் கிழமை காப்புத் தொகை 30 லட்சத்தை தமிழறிஞர் மூவரின்மரபுரிமையாளர்களுக்கு, தமிழ் ஆட்சிமொழித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன்முன்னிலையில் வழங்கினார்.
கவிஞர் முடியரசன் மனைவி கலைச்செல்வி, மகன்கள் பாரி, குமணன், செல்வம்,மகள்கள் குமுதம், அன்னம், அல்லி ஆகிய 7 பேருக்கும் 10 லட்ச ரூபாயும், மயிலைசீனி.வேங்கடசாமியின் வாரிசுகள் அழகம்மாள், அன்புமணி ஆகிய இருவருக்கும் 10லட்ச ரூபாயும், சாமி சிதம்பரனாரின் வாரிசுகள் கோவிந்தராசன், வைரம், சீத்தாராமன்,ராதா ருக்மணி, ராஜசேகரன், செந்தில்குமார், ராஜேஷ்குமார் ஆகிய 7 பேருக்கும் 10லட்சம் ரூபாயுமாக மொத்தம் 30 லட்சம் வழங்கப்பட்டது.
தலைசிறந்த தமிழறிஞர்களின் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடைமையாக்குவதால்இந்நூல்களை யார் வேண்டுமானாலும் பதிப்பித்து வெளியிடலாம். நூலாசிரியர்மறைந்த பின்னும் அவரது நூல்கள் தொடர்ந்து வெளிவரவும் மக்களுக்கு எளிதாகக்கிடைக்கவும் இது வழி வகுக்கிறது.
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற (1996 மே ) இதுவரை தேவநேயப் பாவணார்,மறைமலையடிகள், திரு.வி.க., நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை, வ.உ.சி உள்ளிட்ட 21தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, மொத்தம் 190 லட்சம் காப்புத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications