அமெரிக்க போர்க் கப்பலைத் தாக்கியது விடுதலைப் புலிகளா?

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

American Naval Shipஏமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த அமெரிர்கபோர்க்கப்பல் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதற்கும் விடுதலைப் புலிகளுக்கும்தொடர்பு இருக்குமா என்பது பற்றி அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.

கடந்த 12-ம் தேதி ஏடன் நகரில் நிறுத்தி வைத்திருந்த அமெரிக்க போர்க்கப்பல் குண்டுவைத்து தகர்க்கப்பட்டது. இதில் அமெரிக்க கடற்படை வீரர்கள் 17 பேர்இறந்தனர்.இதில் விடுதலைப்புலிகளுக்கும் தொடர்பு இருக்குமா என்பது குறித்துஅமெரிக்க அதிாகரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு பங்கு இருக்கக் கூடும் என்ற சந்தேகமும்நிலவி வருகிறது.

விடுதலைப் புலிகளுக்கும் பல்வேறு நாட்டில் உள்ள தீவிரவாதிகளுக்கும் தொடர்புஇருப்பதாகக் கூறப்படுகிறது. அதே போல மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள முஸ்லீம்தீவிரவாதிகளுடன் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஏடன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர்க் கப்பல்தாக்கப்பட்டது. இதில் 17 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தனர்.

US Soldiersகப்பல் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் முஸ்லிம் தீவிரவாதிகள் ஈடுபட்டிருக்க கூடும் என்றசந்தேகம் நிலவி வரும் நிலையில், அவர்களுக்கு விடுதலைப் புலிகள் உதவியும்,தற்கொலைப்படையாக மாறவும் பயிற்சி அளித்திருக்கலாம் என அமெரிக்கபுலனாய்வுத்துறை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கப்பற்படை கப்பல்கள், படகுகளை விடுதலைப்புலிகளின் கடற்பிரிவுபுலிகளான, "கடற்புலிகள் குண்டுகள் மூலம் தகர்த்து வருகிறார்கள். குண்டுகள் மூலம்கப்பலையே தகர்த்து மூழ்கடிப்பதில், விடுதலைப் புலிகள் திறமைசாலிகள்.

எனவே, அமெரிக்க கப்பல் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதிலும் புலிகளுக்கு தொடர்புஇருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது.

மனிதவெடிகுண்டுகள் நடமாட்டம் அதிகரிப்பு:

இதற்கிடையே, புதிதாக பதவியேற்றுள்ள 47 அமைச்சர்களையும் கொல்ல, இடுப்பில்வெடிகுண்டுடன் அவர்களை பின் தொடர்ந்து மனித வெடிகுண்டுகள் செல்வதாகதெரிய வந்துள்ளது.

குறைந்தபட்சம் 23 மனித வெடிகுண்டுகள் கொழும்பு நகரில் ஊடுவியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. புலிகளின் தற்கொலைப் படையான, கறுப்புப் புலிகள் பிரிவைச்சேர்ந்த 47 பேர் கொழும்பில், ஊடுருவியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இவர்கள் 700 கிராம் முதல் 6 கிலோ எடைவரையிலுள்ள வெடி குண்டுகளை தங்கள்இடுப்பில் கட்டிக் கொண்டு முக்கியத் தலைவர்களை கொலை செய்வதற்காக சுற்றிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+