திருடர்களைக் கண்காணிக்க வீடியோ கேமராக்கள்
சென்னை:
திருடர்களை பிடிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 வீடியோ கேமிராக்கள்பொருத்தப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளிடம் கொள்ளை அடிப்பது அடிக்கடிநடக்கிறது. இதனால் ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் திருடர்கள்நடமாட்டத்தை கண்காணிக்க வீடியோ கேமிராக்கள்ை பொருத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி இந்தியாவிலேயே முதலாவதாக விருதுநகர் ரயில் நிலையத்தில் வீடியோகேமிராக்கள் பொருத்தப்பட்டன. இதனால் நல்ல பலன் கிடைத்ததை தொடர்ந்துஅடுத்து ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் கேமிராக்கள் பொருத்தப்பட்டன.
தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 7 வீடியோ கேமிராக்கள்வைக்கப்பட்டுள்ளன. இந்த கேமிராக்கள் மூலம் வீடியோ கட்டுப்பாட்டு அறையில்அமர்ந்தபடி போலீசார் திருடர்களை கண்காணித்து வருவார்கள்.
இதன் தொடக்கவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. தமிழக அமைச்சர் ஆற்காடுவீராசாமி இந்த கேமிராக்களை ஸ்விட்ச் ஆன் செய்து தொடங்கி வைத்தார்.












Click it and Unblock the Notifications