பணியின் போது இறந்த சிறுமி குடும்பத்துக்கு இழப்பீடு
கோவை:
திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் இயந்திரத்தில் சிக்கி இறந்த சிறுமிக்கு ரூ. 2 லட்சரூபாய் நஷ்ட ஈடு வழங்க தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருப்பூர் நகரில் பனியன் தொழிற்சாலைகளில் சிறுவர்கள் அதிகம் வேலைசெய்கின்றனர். இந்த குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க தன்னார்வ தொண்டுநிறுவனங்கள் உட்பட அரசு நிறுவனங்களும் அக்கறை செலுத்தி வருகின்றன.
கடந்த 1998-ம் ஆண்டு ஒரு பனியன் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 14 வயதுசிறுமி பானு, இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்த சிறுமி, ஓவர் லாக் இயந்திரத்தில்வேலை பார்த்து வந்தார். இவரது பெற்றோர்கள் தாராபுரம் அருகே விவசாயம் செய்துவருகின்றனர்.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் சிறுமி உயிரிழப்பிற்கு 10 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடுவழங்குவதாக சமரச முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூரில் பிரச்சாரத்தில்ஈடுபட்டிருந்த குழந்தைத் தொழிலாளர் கல்வி வளர்ச்சி மையம் என்ற தன்னார்வத்தொண்டு நிறுவனம் இது பற்றிக் கேள்விப்பட்டது.
பானுவின் பெற்றோர்களை அழைத்துப் பேசிய பின்னர், தொழிலாளர் நல வாரியத்தில்புகார் செய்தது. இந்த புகாரின் பேரில், தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அஸ்வின் நிட்டிங் கம்பெனி நிர்வாகம், இறந்துபோன சிறுமி பானுவின் குடும்பத்தினருக்கு 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் நஷ்ட ஈடுவழங்க உத்தரவிட்டார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications