பெண் சிசுக் கொலை: "பள்ளிகளில் பாடம் தேவை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

பெண் சிசுக் கொலை குறித்து பள்ளிகளில் பாடம் வைக்க வேண்டும் என்று சேலம்மாவட்ட கலெக்டர் நசிமுதீன் கூறியுள்ளார்.

பெண் சிசுவதை தடுப்பு தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் அவர் இக்கருத்தைத்தெரிவித்தார். கூட்டத்தில் சமூக நலத்துறை, காவல் துறை, கல்வித்துறை,சுகாதாரத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துக்களை கலெக்டர் கேட்டு அறிந்துகொண்டார்.

அதன் பின் கலெக்டர் கூறுகையில், பெண் சிசுவதை செய்பவர்கள் வீட்டின் முன் அந்தகிராம மக்கள் கூடி நின்று அந்த வீட்டில் பெண் சிசு கொலை நடந்துள்ளது என ஊரறியதெரிவிக்க வேண்டும். அதன் மூலம் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அவமானம்அடைந்து மீண்டும் அது போன்ற காரியத்தில் ஈடுபட்டமாட்டார்கள்.

மேலும் ஊர்க்கூட்டம் போட்டு பெண் சிசுக் கொலையில் ஈடுபடுவோர்குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க வேண்டும்.

கிராமங்களில் பெண் சிசுவதை நடக்காமல் தடுக்க கிராம கண்காணிப்புக் குழுஅமைக்கப்படும். சுய உதவிக்குழு, ஊட்டச்சத்துப் பணியாளர். கிராம செவிலியர் தவிரகிராமத்தில் இயங்கி வரும் தொண்டு நிறுவனத்தினரும் இந்தக் குழுவில் பங்குபெறுவார்கள்.

கிராமத்தில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்கள், பிறப்பு. இறப்பு ஆகியவற்றை இந்தக்குழுவினர் கவனிப்பார்கள். இவர்கள் பணியை துரிதப்படுத்த மாவட்ட கண்காணிப்புகுழுவும் அமைக்கபடுகிறது.

மாவட்டக் கண்காணிப்புக் குழுலில் சமூக நல அலுவலர், மருத்துவத்துறை திட்ட உதவிஇயக்குனர், தன்னார்வ தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பர். இந்தக் குழுமாதம் ஒரு முறை கூடும்.

8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிப்பாடத்தில் பெண் சிசுவதை பற்றியபாடத்தை சேர்க்க கல்வித்துறைக்கு பரிந்துரை அளிக்கப்படும். இதன் மூலம் பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என கலெக்டர்கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+