பாக். குடியுரிமை பெற்றவரை பாக்.கிற்கே செல்ல நீதிமன்றம் உத்தரவு
பெங்களூர்:
இந்தியாவில் பிறந்து பாகிஸ்தான் குடியுரிமை பெற்றவர், மீண்டும் இந்தியாவில் வாழவிரும்புகிறார். ஆனால் அதற்கு கர்நாடக உ.யர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
பாகிஸ்தானில் வாழ்ந்து வரும் 48 வயதான மீராஜ் உல் ஹக் என்வர் பெங்களூரில்பிறந்தவர். பாகிஸ்தானிலிருந்து மனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் பிப்ரவரி25-ம் தேதி பெங்களூருக்கு வந்தார்.
இந்தியாவிலேயே வசிக்க விரும்பினார். ஆனால் இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகள்அதற்கு அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல்செய்தார். தான் பெங்களூரிலேயே வாழ அனுமதிக்க வேண்டும் என்று அதில்கூறியிருந்தார். ஆனால் அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்தியாவில் மேலும் சில நாட்கள் தங்க அனுமதி அளிக்க வேண்டும்என மனு தாக்கல் செய்தார். அதுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவரைநவம்பர் மாதம் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு திரும்பிச் செல்லுமாறும் உத்தரவுபிறப்பித்தது .
இதற்கிடையே, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் மீராஜ் கூறியிருப்பதாவது:
நான் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவன். 1984-ம் ஆண்டு எனது உறவினர் மாயுமுனாபாய் பெங்களூருக்கு வந்தபோது அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால்அவருக்கு துணையாக பாகிஸ்தான் சென்றேன்.
பாகிஸ்தானில் இருந்து போது பாகிஸ்தான் அதிகாரிகள் என்னைக் கட்டாயப்படுத்திஎன் இந்தியப் பாஸ்போர்டை எடுத்துக் கொண்டு கராச்சியைத் சேர்ந்தவர் என புதியபாஸ்போர்ட்டை பெறுமாறு கூறி என்னை பாகிஸ்தான் குடிமகனாக ஆக்கிவிட்டனர்.
இனி நான் அங்கு வாழ விரும்பவில்லை. என் எஞ்சியுள்ள வாழ் நாளை இந்தியாவில்கழிக்க விரும்புகிறேன். எனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை சிவாஜி நகர், காக்பர்ன்ரோட்டில் உள்ள ஹஃபீசா துவக்கப்பள்ளியில் படித்தேன். அந்தப் பகுதியில், இன்னும்எனது உறவினர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
குமாரபார்க்கில் உள்ள பாரதிய சம்ஸ்கிருதி வித்யாபீடத்தில் (ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளி) கல்வி பயின்றேன்.
1977-ம் ஆண்டு ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர்கண்டிஷன் டிப்ளமாவை மும்பையில்உள்ள தொழிற் பயிற்சி மையத்தில் படித்தேன். பட்டப் படிப்பைப் படிக்க மீண்டும்பெங்களூர் திரும்பி வந்தேன்.
1978-ம் ஆண்டு சென்னை பாஸ் போர்ட் அலுவலகத்தின் மூலம் பாஸ்போர்ட்பெற்றேன். நான் 1985-ம் ஆண்டு இந்தியாவில் பிறந்து கட்டாயப்படுத்தப்பட்டுபாகிஸ்தானில் வாழ்ந்து வந்த நசரத் பாத்திமாவை மணந்து கொண்டேன்.
எங்களுக்கு 14 வயதான சாத் பின், 12 வயதான ஜவாரியா, 10 வயதான சாவூத் மற்றும்7 வயதான சையத் என நான்கு குழந்தைகள் உள்ளனர் எனக் கூறியுள்ளார்.
உள்துறை அமைச்சகத்தில் இந்திய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பம்செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications