இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளராக மார்ஷ் விருப்பம்
சிட்னி:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற விரும்புவதாகஆஸ்திரேலியாவின் ஜியாஃப் மார்ஷ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கபில்தேவ் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையடுத்து அப் பதவியிலிருந்து கபில் தேவ் ராஜினாமாசெய்தார்.
இதனால், இடைக்கால பயிற்சியாளராக ஏற்கெனவே பயிற்சியாளராகப் பணியாற்றியஅன்ஷுமன் கெய்க்வாட் மீண்டும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே சென்னையில் கூடிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்பொதுக் குழுவில் இந்திய அணிக்கு வெளிநாட்டுப் பயிற்சியாளர் நியமிப்பது எனமுடிவு செய்யப்பட்டது.
அதன்படி வெளிநாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலருடையபெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஆஸ்திரேலியாவின் கிரெக் சேப்பல், டீன் ஜோன்ஸ், ஜியாஃப் மார்ஷ், நியூசிலாந்தின்ஜான் ரைட் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால், தன் பெயரைப்பரிசீலிக்கவேண்டாம் என்று டீன் ஜோன்ஸ் கூறிவிட்டார்.
கடைசிய மூன்று பேருடைய பெயர்கள் தேர்வு செய்யப்பட்டன. தனது குடும்பச்சூழ்நிலை காரணமாக இப் போட்டியிலிருந்து நான் விலகுவதாகவும், தன் பெயரையும்பயிற்சியாளர் பதவிக்குப் பரிசீலிக்கவேண்டாம் என்றும் கடைசி நேரத்தில் மார்ஷ்அறிவித்தார்.
இதையடுத்து ஜான் ரைட் மற்றும் கிரெக் சேப்பல் ஆகியோரிடம் மட்டும் நேர் காணல்நடத்துவது என்றும், அவர்களில் ஒருவரை இந்திய அணியின் பயிற்சியாளராகநியமிக்கலாம் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்தது.
அதன்படி அவர்கள் இருவருக்கும் சென்னையில் திங்கள்கிழமை நேர்காணல் நடந்தது.நேர்காணல் தொடங்குவதற்கு முன் திடீரென்று தன் பெயரையும் பயிற்சியாளர்பதவிக்குப் பரிசீலிக்கும்படி மார்ஷ் தெரிவித்தார்.
இருப்பினும், முன்னரே திட்டமிட்டபடி மார்ஷ் தவிர மற்ற இருவரிடமும் நேர்காணல்நடத்தி முடிக்கப்பட்டது. மார்ஷிடம் வேறு ஒரு நாள் நேர் காணல் நடத்தப்படும் என்றுவாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா தெரிவித்தார்.
மார்ஷிடம் நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்ட பிறகுதான் இந்திய அணியின்பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்றும், திங்கள்கிழமை நடந்தநேர்காணலின்போது பயிற்சியாளர்களுக்கான நிபந்தனைகள், விதிமுறைகள்,கட்டுப்பாடுகள் முடிவு செய்யப்பட்டன என்றும் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்ற தான்மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக மார்ஷ் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications