கொல்லப்பட்ட இந்து பூசாரிக்கு ஓரினச் சேர்க்கை பழக்கம் உண்டா?
லீசெஸ்டர் (இங்கிலாந்து):
இங்கிலாந்தில் கொலை செய்யபட்ட இந்து பூசாரி ஹரிஷ் புரோஹித்திற்கும், ஓரினச்சேர்க்கை பழக்கம் உடையவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று போலீஸார்விசாரித்து வருகின்றனர்.
42 வயதான ஹரிஷ் புரோஹித், இங்கிலாந்தில் லீசெஸ்டர் பகுதியில் வசித்து வந்தார்.அங்குள்ள ஒரு கோயிலில் அவர் பூசாரியாக இருந்து வந்தார். இது தவிர இந்துபூசாரிகள் சங்கத் தலைவராகவும் இருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுக்கிடந்தார். அவரது உடலில் 13 இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன.அவரைக் கொலை செய்தது யார் என்று தெரியவில்லை.
கொலையாளியைக் கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஹரிஷ்புரோஹித் கொலை செய்யப்பட்டது தொடர்பாக லீஸெஸ்டரில் உள்ள ஓரினச் சேர்க்கைபழக்கம் உடைய நபர்கள் மீது சந்தேகம் உள்ளதாக விசாரணைக் குழுத் தலைவர்பைரான் வர்ராகெர் தெரிவித்தார்.
இது குறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஹரிஷ் புரோஹித் கொலை தொடர்பான விசாரணையில் 100 பேர் கொண்ட போலீஸ்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏனெனில், ஹரிஷ் புரோஹித் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தால் லீஸெஸ்டர் நகரில் இந்துக்களிடையே அதிர்ச்சியும்,பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
விரைவில் கொலையாளியைப் பிடிக்கவும், கொலைக்கான காரணத்தைக்கண்டுபிடிக்கவும் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹரிஷ் புரோஹித்துக்குலீசெஸ்டர் முழுவதும் நிறைய நண்பர்கள் உள்ளனர்.
குறிப்பாக அவருக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என்றும், அவர்களுடன் மாலைநேரத்தைக் கழிப்பதில் அவர் செலவிட்டார் என்றும் தெரிகிறது. அது தவிர, வீட்டில்மனைவி குடும்பத்தினர் என்ற ஒரு வாழ்க்கையும், வெளியே நண்பர்கள் வட்டத்தில்ஒரு வாழ்க்கையையும் அவர் வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது.
அவருக்கு ஆண் ஓரினச் சேர்க்கை நண்பர்கள் அதிகம் என்றும், லீசெஸ்டரில் உள்ளஆண் ஓரினச் சேர்க்கை கிளப்புகளுக்கு அவர் அடிக்கடி செல்வார் என்றும்விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆகவே, ஆண் ஓரினச் சேர்க்கை நபர்களுக்கும் ஹரிஷ் புரோஹித் கொலைக்கும்தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், அது உறுதியில்லை.
ஹரிஷ் புரோஹித் கொலைக்கான காரணம் சரியாகத் தெரியாத நிலையில் அவரைப்பற்றி வேறு தகவல்கள் தெரிந்தால் அது பற்றி யார் வேண்டுமானாலும் போலீஸாரிடம்தெரிவிக்கலாம். அது விசாரணைக்கு உதவும். தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள்ரகசியமாக வைக்கப்படும் என்று வர்ராகெர் தெரிவித்தார்.
எனக்கு நல்ல கணவராக ஹரிஷ் புரோஹித் இருந்தார். அவர் நல்ல மனிதர். எல்லாதரப்பு மக்களுக்கும் அவர் உதவியாக இருந்தார். யார் மனதும் புண்படும்படிபேசமாட்டார். அவரைப் போல் நல்ல மனிதரை கணவராக அடைந்தது நான் செய்தபாக்கியம் என்று ஹரிஷ் புரோஹித்தின் மனைவி அஞ்சனா ஜோஷி தெரிவித்தார்.
எனது கணவருக்கு வேறு வகையான வாழ்க்கை முறை இருந்ததாகப் போலீஸார்கூறியுள்ளனர். ஆனால், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எங்களுக்குத்திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. பலமுறைநாங்கள் மருத்துவப் பரிசோதனை செய்து கொண்டோம் என்றார் அவர்.
இதற்கிடையே, ஹரிஷ் புரோஹித்துக்கு ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுடன்தொடர்பு இருந்ததை ஹரிஷ் புரோஹித்தின் உறவினர் காயத்ரி மறுத்துள்ளார்.
அவருக்கு பலதரப்பட்ட இன மக்களையும் தெரியும். புரோஹிதராகப்பணியாற்றியதால் அவர் பல தரப்பட்ட நபர்களுடன் அவர் பழகினார்.அப்படியிருக்கும்போது ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் அவருக்கும் உள்ளதொடர்பு என்ற ஒரே கோணத்தில் மட்டும் போலீஸார் ஏன் விசாரணை நடத்துகின்றனர்என்று எனக்குத் தெரியவில்லை என்றார் அவர்.
இதற்கு இங்கிலாந்தில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும் கடுமையானகண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கும் ஹரிஷ் புரோஹித்துக்கும் உள்ள தொடர்புஅல்லது அவரே ஆண் ஓரினச் சேர்க்கையாளர் என்றாலும் அது பற்றி இன்னும்விசாரணை முடியாத நிலையில் போலீஸார் கருத்து தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கதுஎன்று விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலாளர் கிஷோர் தெரிவித்தார்.
ஹரிஷ் புரோஹித்தின் தனிப்பட்ட வாழ்க்கை முறை பற்றி விசாரிப்பதை விடுத்து,அவரது கொலை செய்தவர்கள் யார், கொலைக்கான காரணம் என்ன என்பதைபோலீஸார் விசாரிக்க வேண்டும் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications