திராவிடுக்கு கையில் காயம் .. ஷார்ஜா செல்கிறார் கைஃப்
ஷார்ஜா:
ராகுல் திராவிடுக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அடுத்துஅவருக்குப் பதிலாக விளையாட முகம்மது கெய்ஃப் ஷார்ஜா செல்கிறார்.
ஷார்ஜா கோப்பைக்காக ஜிம்பாப்வேக்கு எதிராக திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில்திராவிட்டின் இடது கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் தொடர்ந்து விளையாட முடியாது என்றும்,ஓய்வெடுக்கவேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து அவருக்குப் பதிலாக இந்திய அணியில் விளையாட 19வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டன் முகம்மது கெய்ஃப்புதன்கிழமை ஷார்ஜா புறப்பட்டுச் செல்கிறார்.
ஷார்ஜா கிரிக்கெட்டில் இந்தியா இன்னும் இரு தகுதிச் சுற்று ஆட்டங்களில் விளையாடஉள்ளது. அவற்றில் வென்றால் இந்தியா இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும்.
திராவிடை அடுத்து கும்ளேவுக்கும் தோல்பட்டையில் வலி ஏற்பட்டுள்ளது. அவருக்குச்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடி வந்த கேப்டன் கங்குலி, இனிமத்திய நிலை ஆட்டக்காரராக விளையாட முடிவு செய்துள்ளார்.
இதையடுத்து அடுத்து இந்தியா விளையாட உள்ள ஆட்டங்களில் டெண்டுல்கருடன்தமிழக வீரர் எஸ். ஸ்ரீராம் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications