அமைதியை ஏற்படுத்துங்கள் .. போப்பாண்டவருக்கு அராபத் கோரிக்கை
ரோம்:
இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையேயான மேற்காசியப் பிரச்சினையில் தலையிட்டுபிரச்சினைக்குத் தீர்வு காணும்படி போப் ஜான் பாலுக்கு பாலஸ்தீன அதிபர் யாசர்அராபத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.இதையடுத்து சமீபத்தில் எகிப்து அதிபர் மற்றும் பில் கிளின்டன் ஆகியோரதுசமரசத்தின் பேரில் இஸ்ரேலும், பாலஸ்தீனமும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொண்டன. ஆனால், அதன்பிறகும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இதையடுத்து அமைதிப்பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபடுவதில்லை என்றுஇஸ்ரேல் கூறியுள்ளது. தற்போது நடந்து வரும் சண்டைக்கு இரு நாடுகளும் பரஸ்பரம்குற்றம் சாட்டியுள்ளன.
இந் நிலையில், சமீபத்திய சண்டையில் இஸ்ரேல் தாக்குதலில் 10-க்கும் அதிகமானபாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 2000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து பாலஸ்தீன துருப்புக்கள் தாக்குதல் நடத்தலாம் என்றமுன்னெச்சரிக்கையில் மேற்குக் கரை மற்றும் காஸா குன்றுப் பகுதியில் தனதுபாதுகாப்பை இஸ்ரேல் அதிகரித்துள்ளது.
இந் நிலையில், மேற்காசியப் பிரச்சினையில் தலையிட்டு அப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும்படி போப் ஜான் பாலுக்கு பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத் வேண்டுகோள்விடுத்துள்ளார். இது தவிர, போப்பைச் சந்திக்க ஒரு உயர் பாலஸ்தீன அதிகாரியையும்அவர் இத்தாலிக்கு அனுப்பியுள்ளார்.
போப் ஜான் பால் தவிர, பாலஸ்தீனம் மீது இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து அவசரக்கூட்டம் நடத்தும்படி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்குபாலஸ்தீன வானொலி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மொராக்கோ எச்சரிக்கை:
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலை மொராக்கோ வன்மையாகக்கண்டித்துள்ளது.
பாலஸ்தீனம் மீது நடத்தி வரும் தாக்குதலை நிறுத்தவில்லை என்றால் தூதரக உறவுதுண்டிக்கப்படும் என்று இஸ்ரேலுக்கு மொராக்கோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்காசியப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும்தோல்வியுற்றதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று இஸ்ரேல் மீது மொராக்கோ குற்றம்சாட்டியுள்ளது.
அரபு நாடுகளின் கருத்து கடுமையானது - அமெரிக்கா:
இதற்கிடையே, இஸ்ரேலின் நடவடிக்கையைக் கண்டித்து அரபு நாடுகள் தெரிவித்துள்ளகருத்துக்கள் கடுமையாக உள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதைக் கண்டித்து சில நாடுகளுக்குமுன் அரபு நாடுகளின் தலைவர்கள் கூடிப் பேசினர்.
அதில் பாலஸ்தீன பகுதியில் இஸ்ரேல் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்களைக்கொன்று குவித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று அரபு நாடுகளின் தலைவர்கள்கருத்து தெரிவித்தனர்.
மேற்காசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண உலக நாடுகளும் குறிப்பாக அமெரிக்காவும்தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இஸ்ரேல் குறித்து அரபு நாடுகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கடுமையாகஉள்ளதாகவும், இப் பிரச்சினையில் எந்த உதவியும் செய்யமுடியாத நிலைஏற்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர்ஜேக் ஸீவெர்ட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேற்காசியப் பிரச்சினையில் அமைதி ஏற்படுவது மிகவும் அவசியம். அதற்காகஇஸ்ரேலும், பாலஸ்தீனமும் தங்களுக்கிடையேயான சண்டை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இரு நாடுகளும் சண்டையை நிறுத்திவிட்டு உடனடியாக அமைதிப்பேச்சுவார்த்தைக்குத் தயாராகவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications