தெ.ஆ. உலகக் கோப்பை கிரிக்கெட் : மைதானங்கள் அறிவிப்பு
டர்பன்:
2003-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ளன. அதற்கான மைதானங்களை தென் ஆப்பிரிக்காசெவ்வாய்க்கிழமை அறிவித்தது.
தற்போது தென் ஆப்பிரிக்காவில் எங்கெல்லாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள்நடத்தப்படுகின்றனவோ, அந்த மைதானங்களில் எல்லாம் உலகக் கோப்பைக்கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படும்.
எல்லா மைதானத்திலும் குறைந்தது இரு முக்கிய ஆட்டங்கள் நடைபெறும். தொடக்கஆட்டம், 9 சூப்பர் சிக்ஸ் ஆட்டங்கள், இரு அரையிறுதி ஆட்டங்கள் மற்றும் இறுதிஆட்டம் ஆகிய முக்கிய ஆட்டங்கள் இந்த மைதானங்களில் நடைபெற உள்ளன.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2003-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதிதொடங்குகிறது. கேப்டவுனில் உள்ள நியூலேன்ட்ஸ் மைதானத்தில் தொடக்க ஆட்டம்நடைபெறும். அது தவிர அங்கு ஒரு சூப்பர் சிக்ஸ் ஆட்டமும் நடைபெறும்.
நாட்டின் மிகப் பழமையான மைதானங்களில் ஒன்றான டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்மைதானத்தில் ஒரு அரையிறுதியும், ஒரு சூப்பர் சிக்ஸ் ஆட்டமும் நடத்தப்படும்.
போர்ட் எலிசபெத் நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் ஒரு அரையிறுதிஆட்டமும், ஒரு சூப்பர் சிக்ஸ் ஆட்டமும் நடத்தப்படும். இந்த மைதானத்தில்தான்நாட்டின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1889-ம் ஆண்டு நடத்தப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
கிழக்கு லண்டனில் உள்ள பஃபெல்லோ பார்க் மைதானத்தில் ஒரு சூப்பர் சிக்ஸ்ஆட்டம் நடத்தப்படும். இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படுவதில்லைஎன்றபோதிலும், கிழக்கு லண்டனில் கிரிக்கெட்டுக்கு உள்ள ஆதரவை அடுத்து அங்குஒரு சூப்பர் சிக்ஸ் ஆட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
உலக கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய மைதாங்களில் ஒன்றாகக் கருதப்படும்ஜொகான்னஸ்பர்க்கில் உள்ள வான்டரரஸ் மைதானத்தில் இறுதி ஆட்டம் நடைபெறஉள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி பகல் பொழுதில் இந்த ஆட்டம்நடத்தப்படும். இங்கு ஒரு சூப்பர் சிக்ஸ் ஆட்டமும் நடத்தப்பட உள்ளது.
பிரிடோரியாவுக்கு அருகில் சென்சுரியன் நகரில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மற்றும்புளோயம்ஃபான்டீனில் உல்ள குட்இயர் பார்க் இரண்டிலும் தலா இரு சூப்பர் சிக்ஸ்ஆட்டங்கள் நடத்தப்படும்.
மேற்கண்ட டெஸ்ட் விளையாடப்படும் 6 மைதானங்கலும் தலா 3 தகுதிச் சுற்றுப்போட்டிகள் நடத்தப்படும். இதனுடன் சேர்த்து அந்த மைதானங்களில் தலா மொத்தம் 5போட்டிகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
முதன்முறையாக சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களாகமேம்படுத்தப்பட்டுள்ள சிறிய மற்றும் புதிய மைதானங்கலான போட்செஃப்ஸ்ட்ரூம்,பீட்டர்மாரிட்ஸ்பர்க் மற்றும் கிம்பர்லியில் தலா ஒரு தகுதிச் சுற்று ஆட்டங்கள்நடத்தப்பட உள்ளன.
2003-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென் ஆப்பிரிக்காவுடன்ஜிம்பாப்வேயும் சேர்ந்து நடத்துகிறது. இதையடுத்து ஜிம்பாப்வே விளையாடும்ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடத்தப்படும்.
எந்தெந்த பிரிவில் எந்தெந்த அணிகள் என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.அப்படி ஒரே பிரிவில் தென் ஆப்பிரிக்காவும் ஜிம்பாப்வேயும் இடம் பெற்றால்,ஜிம்பாப்வேயில் 5 தகுதிச் சுற்று ஆட்டங்கள்தான் நடைபெறும்.
தென் ஆப்பிரிக்காவுக்கும் ஜிம்பாப்வேக்கும் இடையேயான ஆட்டம் தென்ஆப்பிரிக்காவில் நடைபெறும். இரு அணிகளும் வேறு வேறு பிரிவில் இடம் பெற்றால்ஜிம்பாப்வேயில் மொத்தம் 6 தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடத்தப்படும்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications