அரசியல்வாதிகளால் சாராயம் காய்ச்சினேன் .. கொல்லம் பெண் வியாபாரி
கொல்லம்:
அரசியல்வாதிகளின் தொல்லை காரணமாகவே கடந்த 12 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்தேன் என்று கொல்லத்தில் 32 பேர்உயிரைக் குடித்த விஷச் சாராயத்தை விற்ற பெண் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில, சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாரயம் குடித்ததில், 32 பேர் இறந்தனர். இந்த சோக சம்பவத்திற்குக்காரணமாக இருந்த ஹயருன்னிசா என்ற பெண்ணும் இவரது கணவர் ராஜனும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஹயருன்னிசா போலீசாரிடம் பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார். அவருக்கும், அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்புஇருந்து வந்த காரணத்தால்தான், தடையின்றி அவரால் கள்ளச் சாராயம் விற்க முடிந்தது என்றும் தெரிய வந்துள்ளது.
ஹயருன்னிசா, போலீஸ் விசாரணையில் கூறியதாவது:
எனக்கு காஜா என்ற முஸ்லிம் கணவர் இருந்தார். அவருடன் சாராயம் காய்ச்சும் தொழிலைத் தொடங்கினேன். இதுவரை அதை விட முடியவில்லை. எனதுமகள் இந்த தொழிலை விட்டு விடும்படி கூறியும், என்னால் இயலவில்லை.
என் மீது தொடரப்பட்டுள்ள பல வழக்குகளை நடத்த பணம் தேவைப்படுகிறது. அதோடு அரசியல்வாதிகளின் நிர்ப்பந்தமும், நான் சாராயத் தொழிலை விடமுடியாததற்கு ஒரு காரணமாகும்.
கம்யூனிஸ்ட் கட்சியினரும் என்னிடம் பணம் பெற்று வந்துள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சியினர் நான் கொடுக்கும் பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விடுவர்.இந்தக் கட்சி நடத்தும் கைரளி மலையாள டி.வி. சேனலுக்கு நான் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளேன். இதற்கான ஷேர் சர்டிபிகேட் தருவதாகக் கூறினர்.ஆனால், இதுவரை கொடுக்கவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடக்கும் சமயங்களில் நான் நிறைய உதவி செய்துள்ளேன். காங்கிரஸ் கட்சியினரோ கெடுபிடியாக என்னிடம் வசூல் செய்துவிடுகின்றனர். இளைஞர் காங்கிரஸ் மாநாடு நிடத்தும்போது 5 ஆயிரம் ரூபாயும், வேனும் கொடுத்து உதவினேன். இதனால் கடந்த 12 ஆண்டுகளாகஎன்னால் இந்தத் தொழிலை விட இயலவில்லை.
தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்படும் எரிசாராயம், லிட்டர் ஒன்றிற்கு 100 ரூபாய் என்ற விகிதத்தில் பெறுகிறோம்.இந்த சாராயத்தில் ஒரு லிட்டருக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலக்கப்படுகிறது.
பின்னர் கிளாஸ் ஒன்றிற்கு ரூ.20 வீதம் என விற்பனை செய்தோம்.
இதில் ஒரு லிட்டருக்கு 480 ரூபாய் வரை லாபம் கிடைத்து வந்தது. பங்களாவில் டேங்கில் நிரப்பி வைத்திருக்கும் இந்த எரிசாராயத்தை, கலால் துறைஅதிகாரிகள் வந்தாலோ, வேறு அதிகாரிகள் வந்தாலோ எரிசாராயத்தை கழிவறையில் கொட்டி விட வால்வுகள் பொறுத்தப் பட்டிருக்கும்.பங்களாவில் பைப் வழியாக இந்த சாராய சப்ளை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கள்ளச் சாராய வியாபாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதாக கொல்லம் கலால் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுஅங்குள்ள பொருட்களை பொதுமக்கள் சூறையாடினர்.
அதிகாரிகளும் சாராய விற்பனைக்கு உடந்தையாக உள்ளனரா என்பது பற்றி போலீஸார் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications