3-வது அணிக்கு முயற்சிப்போம் .. புதிய நீதிக் கட்சி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி முயற்சி எடுப்போம் என்று புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், திமுக, அதிமுக அணிகளுக்குமாற்றாக மூன்றாவது அணி அமைய வேண்டியது அவசியம்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார்தான் மூன்றாவது அணிக்குத் தலைமைவகிக்கத் தகுதியானவர்.கூட்டணி ஆட்சி கிடையாது என்று அதிமுக திட்டவட்டமாககூறி விட்டது. எனவே தனது தலைமையில் மூன்றாவது அணியை அமைப்பது குறித்துமூப்பனார சிந்திக்க வேண்டும்.
மூன்றாவது அணிக்கு மூப்பனார் தயாராக இல்லை என்றால் கண்ணப்பனின் மக்கள்தமிழ் தேசம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடுத்துவோம்என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications