இந்தியப் புலிகளைக் கலக்கிய இலங்கை சிங்கங்கள்
ஷார்ஜா:
ஷார்ஜாவில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்,இந்தியாவுடனான இறுதி லீக் போட்டியில் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில், 5விக்கெட்டுகளை இழந்து 294 ரன்களைக் குவித்தது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் செளரவ் கங்குலி முதலில் பீல்டிங் செய்ய முடிவுசெய்தார். இலங்கை தரப்பில் ஜெயசூர்யாவும், கலுவிதரனாவும் ஓபனிங் செய்தனர். இந்தியவீரர்களின் துவக்கப் பந்துவீச்சு இறுக்கமாக இருந்தது.
ஸ்கோர் 22 ஆக இருந்தபோது ஜெயசூர்யா அவுட் ஆனாார். அவர் எடுத்த ரன்கள் 11.அவரைத் தொடர்ந்து கலுவிதரனா 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அவர்கள்போன பிறகு ஜோடி சேர்ந்த மஹளா ஜெயவர்த்தனாவும், அட்டப்பட்டுவும் ஆட்டத்தின்போக்கையே மாற்றினர்.
இரு வீரர்களும் சேர்ந்து இந்திய பந்துவீச்சாளர்களை மூச்சுத் திணற வைத்தனர்.இவர்களைப் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சி, கடலில் கரைந்தபெருங்காயம் போல ஆனது. இருவரையும் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
ஜெயவர்த்தன 128 ரன்கள் எடுத்து விட்டுத்தான் பெவிலியன் திரும்பினார். அட்டப்பட்டதன் பங்கிற்கு 102 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.ஜெயவர்த்தனா ஆட்டமிழந்தபோது, அணியின் ஸ்கோர் 251 ஆக இருந்தது.
அவருக்கப் பின் வந்த ருஸ்ஸல் அர்னால்டு விரைவாக ஆடி 28 ரன்களைக் குவித்தார்.50ஓவர்கள் இறுதியில், இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 294 ரன்கள்எடுத்திருந்தது.
இந்தியத் தரப்பில் அகர்கர் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தார். 10 ஓவர்கள் வீசி 48ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார். பிற பந்துவீச்சாளர்கள் வந்தார்கள்,வீசினார்கள், வெறும் கையுடன் சென்றார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications