அ.தி.மு.க.விலிருந்து விலகியது மூ.மு.க.
மதுரை:
சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைத்தால் கூட்டணிக்கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தர முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பால் "கோபமடைந்த மூவேந்தர் முன்னேற்றக்கழகம், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
அதிமுகவிலிருந்து விலகிய கையோடு, தமிழகத்தின் சமீபத்திய சாதிக் கட்சிகளில்ஒன்றான புதிய நீதிக் கட்சியில் கூட்டணி வைத்துக் கொண்டது. அதிமுககூட்டணியிலிருந்து விலகிய முதல் கட்சி இதுதான்.
புதிய கூட்டணிக்குப் பின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர்சேதுராமனும், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும் மதுரையில்செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அதிமுக கூடாரம் காலியாகி வருகிறது.தென் மாவட்டங்களில் அக்கட்சிக்கு யாருமேகிடையாது. ஒவ்வொருவராக அதிமுகவிலிருந்தும், அதன் கூட்டணியிலிருந்தும் விலகிவருகின்றனர்.
சசிகலா தேவர் இனத்தைச் சேர்ந்தவர்.அவர் அதிமுகவில் இருப்பதால், தேவர் இனமேதங்கள் பக்கம் உள்ளதாக அதிமுக காட்டிக் கொள்கிறது. ஆனால், உண்மையில் சசிகலாஎன்பவர் ஒரு மாயை.
யாதவ சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் ஏற்கனவேஅதிமுகவிலிருந்து பிரிந்து சென்று விட்டார். எனவே யாதவ சமுதாயத்தின்வாக்குகளை அதிமுக இழந்து விட்டது.
இதுபோல, மற்றொரு முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் விலகிச் சென்றுவிட்டதால், அவர் சார்ந்த முத்தரையர் சமுதாய மக்களும் அதிமுகவை விட்டு விலகிவிட்டனர் என்றார் அவர்.
180 இடங்களில் வெற்றி:
புதிய நீதிக் கட்சித் தலைவர் சண்முகம் கூறுகையில், மூப்பனார் தலைமையில்மூன்றாவது அணி அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக மூப்பனாருடன்பேசியுள்ளோம்.
திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு மாற்றாக எங்களது மூன்றாவது அணி அமையும்.இப்போது சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்றக் கழகம் எங்களுடன்இணைந்துள்ளது. விரைவில் கண்ணப்பனின் மக்கள் தமிழ் தேசக் கட்சியும் எங்களுடன்இணையும்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு எங்களுடைய கூட்டணியில் இணைவதில் எந்தப்பிரச்சினையும் இல்லை.
தமிழகத்தில் 180 இடங்களில் எங்களுக்கு வெற்றி கிடைக்கும். 50 இடங்களில் நல்லபலத்துடன் உள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications