மேட்ச் பிக்ஸிங்: மத்திய அரசிடம் சிபிஐ விசாரணை அறிக்கை நாளை சமர்ப்பிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்த சிபிஐ விசாரணை அறிக்கை மத்திய அரசிடம்திங்கள்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாவிடம் சிபிஐயின் சிறப்பு இயக்குநர்ஆர்.என். சவாணி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிப்பார் என்றார் சிபிஐவட்டாரங்கள் தெரிவித்தன.

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள்,கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து மேட்ச் பிக்ஸிங் குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது. கடந்த 6 மாதங்களாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

விசாரணையின் இடைக்கால அறிக்கையை மத்திய அரசிடம் சிபிஐ திங்கள்கிழமைதாக்கல் செய்ய உள்ளது. இந்த அறிக்கை சுமார் 150 பக்கங்கள் கொண்டது என்று சிபிஐவட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த அறிக்கையில் சில வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகசில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது.

முதன் முதலாக மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டைக் கூறிய மனோஜ் பிரபாகர், அசாருதீன்,அஜய் ஜடேஜா, அஜய் சர்மா உள்பட 5 கிரிக்கெட் வீரர்கள், முன்னாள்பிசியோதெரபிஸ்ட் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பத்திரிகைகள் செய்திவெளியிட்டன.

பத்திரிக்கைகளின் செய்தி உண்மையல்ல. இன்னும் நாங்கள் அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்கவில்லை. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகுதான் உண்மைதெரியவரும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மத்திய அமைச்சர் தீன்ஷா உள்பட மற்றும் பலரும் இதே கருத்தைத்தான் தெரிவித்தனர்.முன்னதாக தீபாவளியன்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இறுதிக் கட்ட பணிகளை முடிக்க வேண்டியிருப்பதால் அறிக்கை தாக்கல்செய்ய மேலும் சில நாட்களாகும் என்று சிபிஐ தெரிவித்தது. இதையடுத்துதிங்கள்கிழமை மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்த அறிக்கையைப் பெற்றுக் கொள்ளும் மத்திய அமைச்சர் தீன்ஷா அந்தஅறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். அதன்பிறகுதான் அந்தஅறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படும்.

சிபிஐ விசாரணையில் குற்றம் சாட்டப்படும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்று மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும்ஏற்கெனவே தெரிவித்துள்ளன.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+