திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி விழா சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் விரதத்தைக் கடைபிடித்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகத் திகழ்கிறது திருச்செந்தூர் முருகன்கோவில்.
இங்கு சனிக்கிழமை கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி கோவில் நடை அதிகாலை 3 மணிக்குத் திறந்தது. பின்னர் விஸ்வரூப தீபாராதனைதொடங்கியது. கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
காலை 6 மணிக்கு பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். பின்னர் யாகசாலை பூஜை நடந்தது. யாகசாலையில் கணபதி பூஜை, புண்ணியவஜனம், கும்ப பூஜை, பரிவார, பிரதான கும்ப பூஜை ஹோமம் ஆகியவை நடந்ததன.
பின்னர் நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி ஆ.சண்முகம்,அறங்காவலர் குழுத் தலைவர் எம்.டி.கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சூரசம்ஹாரம்:
வரும் நவம்பர் 2 ம் தேதி மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. இதைக்காண தமிழகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள்கூடுகிறார்கள். 6 நாட்கள் தொடர்ந்து விரதம் கடைபிடித்து வரும் பக்தர்கள் சூரசம்ஹாரம் முடிந்ததும் கடலில் நீராடி விரதத்தை முடிப்பார்கள்.












Click it and Unblock the Notifications