தவறான ஆபரேஷன்.. மனித உரிமை கமிஷன் விசாரணை

Subscribe to Oneindia Tamil

கோவை:

தவறான ஆபரேஷன் மூலம் கை துண்டிக்கப்பட்ட பெண்ணிடம் மனித உரிமைகமிஷன் உறுப்பினர் விசாரணை நடத்த உள்ளார்.

கோவை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டவர் வள்ளி.இவருக்கு பிரசவத்தில் குழந்தை பிறந்ததும், அவருக்கு கை மூலம் மருந்துசெலுத்தப்பட்டது.

சிறிது நேரத்தில் அவரது கை செயலிழந்தது. இதையடுத்து ஆபரேஷன் மூலம் கையைடாக்டர்கள் அகற்றி விட்டனர். எனவே, இது தொடர்பாக வள்ளி, நீதி கோரிஉண்ணாவிரதம் இருந்தார்.

10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடும், வேலையும் வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். இந்தப் போராட்டத்திற்கு மனித உரிமை கமிஷனும் ஆதரவு தெரிவித்தது.

வள்ளிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு மனித உரிமை கமிஷன்பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை ஏற்கப்பட்டு, வள்ளிக்கு ஒரு லட்ச ரூபாய் நஷ்டஈடும், மஸ்தூர் வேலையும் அரசு மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஊட்டி, கோவை நகரங்களில் பல்வேறு வழக்கு விசாரணைமேற்கொள்ள தமிழக மனித உரிமை கமிஷன் உறுப்பினர் ரத்தினசாமி ஊட்டி வருகிறார்.

ஊட்டி விருந்தினர் மாளிகையில் வள்ளியிடம் அக்.31-ம் தேதி அவர் விசாரணைநடத்துகிறார். இதன் பின்பு மேலும் உதவிகளை வள்ளிக்கு அரசு அளிக்குமா என்பதுபற்றி ஆய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+