மத்திய இலங்கையில் அமைதி திரும்புகிறது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

வன்முறைச் சம்பவங்களை அடுத்து இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள இருமாவட்டங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு திங்கள்கிழமை காலைவிலக்கிக் கொள்ளப்பட்டது.

அங்கு தற்போது அமைதி திரும்புவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள பண்டாரவளே என்ற மறுவாழ்வு முகாமில்தங்கவைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த 27 பேர்படுகொலை செய்யப்பட்டனர்.

இதையடுத்து அப் பகுதியில் வன்முறை வெடித்தது. இருப்பினும், இலங்கைராணுவத்தினரால் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது. இந் நிலையில், படுகொலைசெய்யப்பட்ட 27 பேரின் இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இறுதிச் சடங்கு முடிந்தவுடன் மீண்டும் இக் கலவரம் ஏற்பட்டது. தலாவாகலே என்றஇடத்தில் இருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

தமிழ் எஸ்டேட் தொழிலாளர்கள் சிலர், பயணிகள் ரயிலை நிறுத்தி 4 பெட்டிகளுக்குத்தீ வைத்தனர். பிறகு 120 பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராணுவத்தினரும், போலீஸாரும்வன்முறை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பினர்பிணைக் கைதிகளை விடுவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியானார்கள்.

இச் சம்பவத்தை அடுத்து வன்முறையும், கலவரமும் ஏற்பட்ட நுவரேலியா, பாதுல்லாஆகிய இரு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருமாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு முதல்எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் ஏற்படவில்லை. இதையடுத்து திங்கள்கிழமைகாலை முதல் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.

தற்போது இரு மாவட்டங்களிலும் அமைதி திரும்புகிறது. இருப்பினும், அங்கு பலத்தபாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+