குழந்தைகளை விளையாட்டில் ஊக்கப்படுத்துங்கள் .. மல்லேஸ்வரி

Subscribe to Oneindia Tamil

விஜயவாடா:

8 வயதில் இருந்தே குழந்தைகளுக்கு விளையாட்டில் பெற்றோர்கள் அதிக ஊக்கம்கொடுக்கவேண்டும். அப்போதுதான் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும்,ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் என்று கர்னம்மல்லேஸ்வரி தெரிவித்தார்.

சமீபத்தில் சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே ஒருவெண்கலப் பதக்கம் தான் கிடைத்தது. அதை பளுதூக்கும் போட்டியில்பெண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் கர்னம் மல்லேஸ்வரி வென்று தந்தார்.

அத்தகைய சாதனையைப் படைத்த கர்னம் மல்லேஸ்வரி, விஜயவாடாவில்நடைபெற்ற பாராட்டு விழாவுக்குப் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் அரசியல் புகுந்துவிட்டது. இதுதவிர்க்கப்படவேண்டும். விளையாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது.அப்போதுதான் விளையாட்டில் இந்தியா சாதிக்க முடியும்.

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் நான் கலந்து கொள்ள முடியாத வகையில் அரசியல்குறுக்கீடும், தலையீடும் இருந்தது. இருப்பினும், எனது திறமையாலும், வேறு சிலரதுமுயற்சியாலும் சிட்னி ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு பதக்கம் வென்றேன்.

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு 8 வயதிலிருந்தே விளையாட்டில் ஊக்கம்அளிக்கவேண்டும். இந்தியாவைப் பொறுத்தவரை சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொள்ள திறமை இருந்தும் நிதி வசதி இல்லாதவர்கள் நிறையபேர் உள்ளனர்.

ஆகவே, அத்தகையவர்களுக்கு ஸ்பான்சர் செய்ய நிறைய பேர் முன் வரவேண்டும்.அப்போதுதான் ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும்இந்தியாவுக்கு நிறைய பதக்கங்கள் கிடைக்கும்.

2004-ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம்வெல்லவேண்டும் என்பதே என் ஆசை. அதற்காக நான் நன்றாகப் பயிற்சி பெற்றுவருகிறேன் என்றார் கர்னம் மல்லேஸ்வரி.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+