ஜெ.வுக்காக ஒத்திவைக்கப்பட்ட தேவர் குருபூஜை
Subscribe to Oneindia Tamil
கமுதி:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வருகையால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடக்கவிருந்த அரசுத் தரப்பிலான தேவர் குரு பூஜையின் நேரம்மாற்றப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் சமாதியில் மூன்று நாட்கள் குருபூஜை நடத்தப்படுகிறது. இந்தாண்டு 38 வது குருபூஜை நடத்தப்படுகிறது. தேவர் பிறந்த தேதியும்,அவர் இறந்த தேதியும் அக்டோபர் 30 ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா வருடங்களிலும், அக்டோபர் 30 ம் தேதி காலை 10 மணிக்குத்தான் வழக்கமாக அரசு விழா நடத்தப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு அரசுவிழாவின் போது, அமைச்சர்கள் மீது அதிமுக வினர் கல்வீசித் தாக்கினர்.
அதனால் இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 10 மணி முதல் 11 மணிக்குள் ஜெயலலிதா வந்து சென்ற பிறகு மாலை 4 மணிக்கு அரசுவிழா மாற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications