ஏர் இந்தியா குண்டுவெடிப்பு: கைதான சீக்கியர்களுக்கு காவல் நீட்டிப்பு
வான்கூவர் (கனடா):
ஏர் இந்தியா விமானம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்ட வழக்கில் கைதான சீக்கியதீவிரவாதிகள் இருவருக்கு காவல் நீட்டிக்கப்பட்டது.
1985-ம் ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான கனிஷ்கா என்ற போயிங்விமானம் கனடாவில் உள்ள வான் கூவரில் இருந்து டெல்லிக்கு வந்து கொண்டிருந்தது.அதில் 329 பேர் இருந்தனர்.
அயர்லாந்து வான் எல்லைக்கு அப்பால் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில்விமானம் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் இருந்த அனைவரும் இறந்தனர்.விசாரணையில் விமானம் குண்டு வைத்துத் தகர்ப்பட்டது தெரியவந்தது.
இது பற்றி கடந்த 15 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில்,இவ் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்பட்ட சீக்கிய தீவிரவாதிகள் அஜெய்ப்சிங் பாக்ரி, ரிபுதாமன் சிங் மாலிக் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவர் மீதும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், இருவரும் காவல் நீட்டிப்புக்காக இருவரும் வான்கூவரில் நீதிமன்றத்தில்செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். இருவருடைய காவலையும் நீதிபதிநீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
இவ் வழக்கில் ஹர்தியால் சிங் ஜோஹல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று போலீஸார் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications