மேட்ச் பிக்ஸிங்: 2 நாட்களில் சிபிஐ அறிக்கை வெளியிடப்படும் .. அமைச்சர்
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்திமத்திய அரசிடம் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை இரண்டு நாளில் வெளியிடப்படும்என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷா தெரிவித்தார்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள், அதிகாரிகள்ஆகியோர் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாகமத்திய அரசின் உத்தரவின் பேரில் கடந்த 6 மாதம் சிபிஐ விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையின் அறிக்கை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் தீன்ஷாவிடம்திங்கள்கிழமை ஒப்படைக்கப்பட்டது. நவம்பர் 20-ம் தேதி நாடாளுமன்ற குளிர்காலகூட்டத் தொடர் தொடங்குகிறது.
அப்போது நாடாளுமன்றத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்று தீன்ஷா தெரிவித்தார். ஆனால், அடுத்த இரண்டு நாளில் சிபிஐயின் விசாரணைஅறிக்கை வெளியிடப்படும் என்று அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்துப் பேசிய பிறகு இம் முடிவுஎடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். சிபிஐ தாக்கல் செய்த விசாரணைஅறிக்கையில் எந்த மாற்றமும் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை.
நான் ஏற்கெனவே கூறியபடி, மேட்ச் பிக்ஸிங் தொடர்பான அனைத்து உண்மைகளும்மக்களுக்குத் தெரிவிக்கப்படும். ஆகவே, சிபிஐ அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுகுறித்து யாரும் எந்த சந்தேகமும் கொள்ளவேண்டாம்.
மேலும், சிபிஐ அறிக்கை யாருக்கும் எதிராகவோ, யாருக்கும் ஆதரவாகவோ இல்லை.பாரபட்சமற்ற முறையில்தான விசாரணை நடத்தப்பட்டு அறிக்கைதயாரிக்கப்பட்டுள்ளது என்றார் தீன்ஷா.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications