காங்கேயம் விபத்தில் 4 பேர் சாவு
ஈரோடு:
காங்கேயம் அருகே கார்-வேன் மோதலில் டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்இறந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் டாக்டர் வீரபத்திரன் (65). இவர்தனது மனைவி சரஸ்வதி (35) மற்றும் மருமகள் ராஜகாந்தம், ரம்யா (11), பிரவீன் (9),ஆகியோருடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள உறவினரின்திருமணத்திற்குச் சென்று விட்டு அம்பாசிடர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
காரை டிரைவர் மணிகண்டன் ஓட்டி வந்தார். அம்பாசிடர் கார், காங்கேயம் அருகேஉள்ள வெள்ளகோயில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருவாரூரில்இருந்து ஒரு வேன் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தது.
இரண்டு வாகனங்களும் காங்கேயம் அருகே உள்ள பகவதிபாளையம் என்ற இடத்தில்மோதிக் கொண்டன. இந்த சம்பவத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வீரபத்திரன்,டிரைவர் மணிகண்டன், பின் சீட்டில் அமர்ந்திருந்த வீரபத்திரனின் மனைவி சரஸ்வதிஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பலத்த காயமடைந்த ராஜகாந்தம், ரம்யா, பிரவீன் ஆகியோர் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ராஜகாந்தம் இறந்தார். வேனில் பயணம்செய்த சரவணன், பாரதி, உமாநாத், வெங்கடேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
வேனில் பயணம் செய்த அனைவரும் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில்பணிபுரிபவர்கள். தீபாவளிக்கு ஊருக்குச் சென்று விட்டு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரு விபத்துக்களில் 8 பேர்இறந்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் இந்த மாவட்டத்தையே சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications