குண்டர் சட்ட கைதிகள் .. அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்
சென்னை:
குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்ஓராண்டுக்கு பிறகும் சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது என்று சென்னை உயர் நீதிமன்றம்கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் பத்மநாபன், தங்கவேல்ஆகியோரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் அளித்த தீர்ப்பு வருமாறு:
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டம் மற்றும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட ஏராளமான கைதிகளை உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது.
உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விடுதலை பெற முடியாத நிலையில் இன்னும் பலர் சிறையில்இருப்பதாக வக்கீல் ஒருவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.
இந்திய அரசியல் சாசனத்தின் 226வது பிரிவின்படி எங்களுக்கு தரப்பட்ட அதிகாரத்தின் கீழ்நாங்களாகவே ஹேபியஸ் கார்பஸ் மனுவாக பாவித்து இந்த தீர்ப்பை அளிக்கிறோம்.
குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலர் ஓராண்டு சிறையில்அடைக்கப்படுகின்றனர். இதை எதிர்த்து அதிகாரிகளிடம் முறையீடு செய்ய கைது செய்யப்பட்டவர்களுக்குஉரிமை உண்டு.
இத்தகைய உரிமை உண்டு என்ற விவரத்தை கைது உத்தரவிலேயே அதிகாரிகள் குறிப்பிட வேண்டும்.அவ்வாறு குறிப்பிடாவிட்டால் கைது உத்தரவு செல்லாது. அதேபோல் இரு சட்டங்களின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவேஅப்படிப்பட்டவர்களும் தொடர்ந்து சிறையில் இருப்பது துரதிருஷ்டவசமானது.
குண்டர் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கடந்த ஆகஸ்ட் 21ம்தேதிக்கு முன்பு கைதாகி சிறையில் இருப்பவர்கள் பற்றிய விவரத்தை 10 நாட்களுக்குள்நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், போலீஸ்கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்படுகிறது.
இரு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்றுஅரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications