புதிதாக பிறக்கும் மாநிலங்களுக்கு கவர்னர்கள் அறிவிப்பு
டெல்லி:
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர், உத்தாரஞ்சல், ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களுக்கான கவர்னர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது 25 மாநிலங்களும், 6 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. தற்போது புதிதாக மூன்று மாநிலங்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளன.மத்தியப் பிரதேசத்தை இரண்டாகப் பிரித்து சட்டீஸ்கர் என்ற மாநிலமும், உ.பி. மாநிலத்தைப் பிரித்து உத்தாரஞ்சல் மாநிலமும், பீகாரைப் பிரித்து ஜார்கண்ட்மாநிலமும் உருவாக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் சட்டீஸ்கர் மாநிலம் செயல்படத் துவங்கும். ஜார்க்கண்ட் மாநிலம் நவம்பர் 9 ம் தேதியும், உத்தராஞ்சல் மாநிலம்நவம்பர் 15 ம் தேதியும் செயல்படத் தொடங்கும்.
மூன்று புதிய மாநிலங்களுக்கும் கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டீஸ்கர் மாநில கவர்னராக தினேஷ் நந்தன் சஹாயா பொறுப்பேற்கவுள்ளார்.
அமைச்சரவை செயலாளர் பதவியிலிருந்து செவ்வாய்க்கிழ ஓய்வு பெறும் பிரபாத் குமார் ஜார்க்கண்ட் மாநில புதிய கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், அகாலி தள கட்சியின் மூத்த தலைவருமான சுர்ஜித் சிங் பர்னாலா உத்தராஞ்சல் மாநிலத்தின் கவர்னராகபதவியேற்கவுள்ளார். இவர் முன்பு தமிழக கவர்னராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications