நிருபரைத் தாக்கிய அதிமுக தொண்டர் கைது
மதுரை:
மதுரையில் அதிமுக தொண்டரால் தினமலர் நிருபர் தாக்கப்பட்டார். அவரைத் தாக்கியதொண்டர் கைது செய்யப்பட்டார்.
இது பற்றி கூறப்படுவதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தென் மாவட்டங்களுக்கு 8 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது சுற்றுப்பயண விவரம் குறித்த செய்தியைச்சேகரிக்க பல்வேறு பத்திரிக்கை நிருபர்களும் உடன் சென்றுள்ளனர்.
இந் நிலையில், மதுரையில் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை தங்கிய ஹோட்டலுக்குவெளியே தினமலர் பத்திரிக்கையின் நிருபர் என். சுந்தரை அதிமுக தொண்டர் தாஸ்தாக்கினார். மேலும் அவரை தரக்குறைவாகவும், எச்சரிக்கை விடும் வகையிலும் தாஸ்திட்டியதாகக் கூறப்படுகிறது.
இத் தாக்குதலில் சுந்தருக்கு இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது. தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஹோட்டலில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜெயலலிதா புறப்பட்டுச் சென்றபிறகு இத் தாக்குதல் நடந்துள்ளது. இத் தாக்குதல் குறித்து போலீஸார் வழக்குப் பதிவுசெய்து நிருபரைத் தாக்கிய தாஸை கைது செய்தனர்.
தினமலர் நிருபர் தாக்கப்பட்டதற்கு மதுரை நிருபர்கள் சங்கம் வன்மையானகண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.
யு.என்.ஐ.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications