வீரப்பன் "சிக்னலுக்காக காத்திருக்கும் தூதர்கள்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியில் இருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்டு வர நக்கீரன் ஆசிரியர் கோபால், பழ.நெடுமாறன் அடங்கியதூதுக்குழுவினர் செவ்வாய்க்கிழமை இரவு காட்டுக்குள் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.
கர்நாடக சிறையில் இருக்கும் 51 தடா கைதிகளும் தனித்தனியே வீரப்பனுக்கு கடிதம் எழுதியுள்ளனர். சட்டப்படி போராடியேநாங்கள் வெளியே வரவிரும்புகிறோம் என்றும் எனவே உடனடியாக நடிகர் ராஜ்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்றும்அவர்கள் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளனர்.
இதேபோல் தமிழக சிறையில் உள்ள ஐந்து தமிழ்தீவிரவாதிகளும், வீரப்பனுக்கும் மாறனுக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.அவர்களும் ராஜ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாகத் தெரிகிறது.
இந்தக் கடிதங்கள் அனைத்தும் காட்டுக்குள் இருக்கும் நக்கீரன் நிருபர்கள் மூலம் வீரப்பனின் கூட்டாளிகளிடம் கொடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. திங்கள்கிழமை காலையே இந்தக் கடிதங்கள் வீரப்பனை சென்றடைந்து விட்டது. இந்தக்கடிதத்திற்குசெவ்வாய்க்கிழமை வீரப்பனிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீரப்பனின் பதிலை எதிர்பார்த்து சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் நக்கீரன் நிருபர்கள் சுப்பு, சிவசுப்பிரமணியன் இருவரும்காத்திருக்கிறார்கள். வீரப்பனின் கூட்டாளிகளிடம் இருந்து தகவல் வந்ததும் இவர்கள் போன் மூலம் நக்கீரன் ஆசிரியர்கோபாலுக்கு தகவல் சொல்வார்களாம்.
செவ்வாய் இரவு அல்லது புதன்கிழமைக்குள் வீரப்பனிடம் இருந்து தகவல் வந்து விடும் என்று கூறப்படுகிறது. தகவல் வந்ததும்நக்கீரன் ஆசிரியர் கோபால், நெடுமாறன் குழுவினர் அனைவரும் காட்டிற்குச் கிளம்பிச் செல்வார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications