சிட்னி ஒலிம்பிக்: 97 பதக்கங்கள் வென்று அமெரிக்கா முதலிடம்

Subscribe to Oneindia Tamil

சிட்னி:

சிட்னி ஒலிம்பிக் போட்டியில் 39 தங்கம் உள்பட மொத்தம் 97 பதக்கங்களை வென்றுஅமெரிக்கா முதலிடம் பெற்றது.

போட்டியின் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை கூடைப்பந்துப் போட்டியில்ஆண்களுக்கான பிரிவில் அமெரிக்காவுக்கு கடைசி தங்கப் பதக்கம் கிடைத்தது.

ரஷ்யா 32 தங்கத்துடன் மொத்தம் 88 பதக்கங்கள் வென்று இரண்டாவது இடத்தையும்,சீனா 28 தங்கத்துடன் மொத்தம் 59 பதக்கங்களுடன் 3-ம் இடத்தையும் பெற்றன.

போட்டியின் 15-ம் நாள் முடிவில் ரஷ்யாவும், சீனாவும் தலா 28 தங்கங்களுடன்இரண்டாவது இடத்தில் இருந்தன. ஆனால், கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாமேலும் 4 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாவம் இடம் பிடித்தது.

போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 16 தங்கப் பதக்கம் உள்பட மொத்தம் 58பதக்கங்களை வென்று 4-ம் இடம் பெற்றது.

சிட்னி ஒலிம்பிக்கில் மொத்தம் 199 நாடுகள் கலந்து கொண்டன. ஆனால், 80நாடுகள்தான் பதக்கங்களை வென்றன. இந்தியா, சிலி, காமரூன், கிர்கிஸ்தான் உள்பட17 நாடுகள் ஒரே ஒரு பதக்கத்தை வென்றன. பதக்கப் பட்டியலில் இந்தியா 73-வதுஇடத்தைப் பிடித்தது.

சிட்னி ஒலிம்பிக்கில் மொத்தம் 31 விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள்நடத்தப்பட்டன. 301 தங்கம், 299 வெள்ளி, 328 வெண்கலப் பதக்கங்கள் உள்படஉள்பட 925 பதக்கங்கள் வழங்கப்பட்டன. (ஆண்களுக்கான 50 மீட்டர் நீச்சலில் இருதங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன).

தொடர்ந்து இரண்டாவது முறையாக பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்பெறுவது இது 4-வது முறையாகும். அதிகபட்சமாக 1920 ஆன்ட்வெர்ப் ஒலிம்பிக்முதல் 1932 லாஜ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் வரை தொடர்ந்து 4 முறை பதக்கப் பட்டியலில்அமெரிக்கா முதலிடம் பெற்றுள்ளது.

1996-ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக்கில் அமெரிக்கா 44 தங்கம்உள்பட மொத்தம் 101 பதக்கங்களை வென்றது. இரண்டாவது இடத்தை ஜெர்மனியும்,3-வது இடத்தை ரஷ்யாவும் பெற்றன.

அமெரிக்கா அதிகபட்சமாக 1904-ம் ஆண்டு செயின்ட் லூயிஸில் நடைபெற்றஒலிம்பிக்கில் 80 தங்கம் உள்பட மொத்தம் 246 பதக்கங்களை வென்று சாதனைபடைத்தது. இரண்டாம் இடம் பிடித்த ஜெர்மனி மொத்தம் 15 பதக்கங்களையே வென்றுகுறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா கலந்து கொள்ளத் தொடங்கியதற்குப் பிறகுதான்பதக்கப் பட்டியலில் யார் முதலிடம் பெறுவது என்பதில் அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவுக்கும் கடும் போட்டி நிலவுகிறது.

1952 ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில்தான் ரஷ்யா முதன்முறையாகக் கலந்து கொண்டது.அப்போட்டியில் அமெரிக்கா முதலிடம் பெற்றது. ரஷ்யா இரண்டாம் இடம் பெற்றது.

அதன் பிறகு நடந்த ஒலிம்பிக்குகளில் ரஷ்யா 7 முறை பதக்கப் பட்டியலில் முதலிடம்பெற்றுள்ளது. சிட்னி ஒலிம்பிக்கையும் சேர்த்து அமெரிக்கா 6 முறை முதலிடம்பெற்றுள்ளது.

ஆனால், இதுவரை நடந்த 27 ஒலிம்பிக்குகளில் (முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் காரணமாக 3 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவில்லை) 23-ல்மட்டுமே அமெரிக்கா கலந்து கொண்டது. 1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்தஒலிம்பிக்கில் அமெரிக்கா கலந்து கொள்ளவில்லை.

தான் கலந்து கொண்ட 23 ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்கா மொத்தம் 12 முறைபதக்கப் பட்டியலில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.

1896-ம் ஆண்டு ஏதென்ஸில் நடைபெற்ற முதல் ஒலிம்பிக்கில் மொத்தம் 108பதக்கங்கள் வென்று கிரீஸ் முதலிடம் பெற்றது. இதில் அமெரிக்கா 19 பதக்கங்கள்வென்று இரண்டாம் இடம் பெற்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+