திமுக கூட்டணியில் சேருமா புதிய தமிழகம்?
ஸ்ரீவைகுண்டம்:
திமுக கூட்டணிக்கு, புதிய தமிழகம் வந்தால் அதை ஏற்றுக் கொள்வோம் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
ஸ்ரீவைகுண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் 170 வது தொகுதி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட அவர் கூறியதாவது:
மாநாடு என்றால் பந்தல் போட்டு நடத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் அரங்கத்திற்குள் மாநாடு நடத்துகிறார்கள்.ஆனால் நாங்கள் வெளியே நடத்துகிறோம். அவ்வளவுதான்.
இப்போதுதான் தொகுதி மாநாடுகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்கு பொதுமக்கள்தான் ஆதரவு தர வேண்டும்.நான் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்துவிட்டேன் என்று கூறுவதெல்லாம் வெறும் வதந்தி.
மூப்பனாரும், திருமாவளவனும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். ஜெயலலிதாவோ தனித்துத்தான் ஆட்சி என்கிறார். ஆனால் நாங்கள்ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications