இலங்கை மக்கள் அமைதி காக்க சந்திரிகா வேண்டுகோள்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகள் தூண்டிவிடும் வன்முறையில் சிக்காமல், நாட்டு மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்றுஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா ரேடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் ரேடியோ மூலம் நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள்:
நுவரேலியா பகுதியில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் விடுதலைப் புலிகள் நடந்து கொள்கின்றனர். இதனால் கலவரம்பெரிதாகி விடாதவாறு நாட்டு மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும்.
இலங்கையின் மத்தியப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் தேயிலை உற்பத்தியை நம்பி வாழ்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்தில்பெரும்பங்கு வகிப்பது தேயிலை உற்பத்திதான். நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைப்பதே புலிகளின் நோக்கம்.
தேயிலை உற்பத்தி அதிகம் உள்ள இலங்கையின் மத்தியப் பகுதியில் வன்முறையைத் தூண்டிவிட்டு, அங்கு பொருளாதார நிலையை சீர்குலைக்கப்பார்க்கிறார் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். அதனால்தான் அவர் அங்கு மனித நேயமற்ற முறையில் கலவரங்களைத் தூண்டிவிடுகிறார்.
இதையெல்லாம் தாண்டி நாட்டு மக்கள் அமைதி காக்க வேண்டும். பல்வேறு மதத் தலைவர்கள், பிற தலைவர்கள், தனியார்அமைப்புக்கள் அனைவரும் இவ்விஷயத்தில் அரசுக்குத் தங்களது முழு ஒத்துழைப்பையும் கொடுக்க வேண்டும்.
போலீஸார் வன்முறை பரவி விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். கலவரம் குறித்த எந்தவிதவதந்திகளையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம்.
நுவரேலியா மற்றும் பாடுல்லா பகுதிகளில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும்என்று ரேடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் அதிபர் சந்திரிகா.
முன்னதாக, இலங்கையில் பண்டாரவிளை மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, சரண் அடைந்த விடுதலைப் புலிகள் மீதுகிராமத்து மக்கள் நடத்திய தாக்குதலில் 29 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மத்திய இலங்கையில், சிங்களர், தமிழர்இடையே மோதல் வெடித்தது.
கொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரின் இறுதிச் சடங்கு நுவரேலியா பகுதியில் நடந்து கொண்டிருந்த போது வன்முறை மூண்டது. இதுதொடர்பாக 14 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வன்முறை நடந்த பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். பஸ் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications