அசார், அஜய் சர்மா மீது ஊழல் வழக்கு ..?

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐயின் விசாரணை அறிக்கையில்குற்றம் சாட்டப்பட்ட அசாருதீன், அஜய் சர்மா ஆகியோர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐயின் விசாரணை அறிக்கையைமத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில் அசாருதீன், அஜய் ஜடேஜா, அஜய்சர்மா, மோங்கியா, மனோஜ் பிரபாகர் ஆகியோர் மீது கூறப்பட்ட மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் அசாருதீனும், அஜய் சர்மாவும் அரசு ஊழியர்களாகஉள்ளனர். ஆகவே, அவர்கள் மீது ஊழல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படலாம்என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

அசாருதீன் தற்போது ஹைதராபாத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தலைமைமேலாளராகப் பணியாற்றி வருகிறார். அஜய் சர்மா மத்திய கிடங்கு கழகத்தில்பணியாற்றி வருகிறார்.

இவர்கள் மீது மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் 1988-ம் ஆண்டுஊழல் தடுப்புச் சட்டத்தின் 2 (சி) பிரிவின் கீழ் வழக்குத் தொடரப்படலாம் என்றும்,அது குறித்து யோசித்து வருவதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் முன் தான் கண்டறிந்தஉண்மைகள், சேகரித்த ஆவணங்கள் பற்றி இந்திய சொலிசிடர் ஜெனரல் ஹரிஷ்சாலவேயிடம் சிபிஐ ஆலோசனை நடத்தியது.

சிபிஐ கொடுத்த ஆவணங்களைப் பரிசீலித்த சால்வே, குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள்மீது கிரிமினல் குற்றச்சாட்டு வழக்கும், சூதாட்ட வழக்கும் பதிவு செய்யமுடியாது என்றுகூறிவிட்டார்.

கிரிக்கெட் வீரர்கள் மீது சட்ட ரீதியாக வழக்குத் தொடருவது குறித்து உச்ச நீதிமன்றமுன்னாள் நீதிபதி மனோஜ் குமார் முகர்ஜியிடம் சிபிஐ விரிவாக ஆலோசனைநடத்தியுள்ளது. வீரர்கள் மீது இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழக்குத்தொடர முடியாது என்று அவர் கூறிவிட்டார்.

இதையடுத்து கிரிக்கெட் வீரர்கள் மீது ஊழல் வழக்குத் தொடரும் முயற்சிகளை சிபிஐமேற்கொண்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட மற்ற வீரர்கள் யாரும் அரசு ஊழியர்இல்லாததால் அவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடரப்படாது என்று சிபிஐ அதிகாரிகள்தெரிவித்தனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+