ரஷிய அதிபர் புடின் நாளை இந்தியா வருகிறார்
டெல்லி:
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மூன்று நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை இந்தியா வருகிறார்.
மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் லலித்மான்சிங் இதுகுறித்துக் கூறுகையில், இந்தியா, ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் நல்ல நட்புறவுடன் இருந்துவருகிறது. புடினின் தற்போதைய இந்திய வருகையினால் இந்த உறவு இன்னும் மேம்பாடடையும்.
பிற நாடுகளுடன் உள்ள உறவை விட இந்தியா-ரஷ்யா உறவு மிகவும் புரிந்துகொள்ளும் விதத்திலும், நட்புறவைப் பறைசாற்றும் வகையிலும் உள்ளதுஎன்றார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை செயலாளர் செர்கை பரிகோட்கோ புடினின் இந்திய வருகை குறித்துக் கூறுகையில், அனைத்துத் துறையிலும் இரு நாடுகளும்வளர்ச்சியடைய இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
புடினின் இந்திய வருகையின் போது, இரு நாட்டு உறவுகளும் வலுப்பட பொருளாதாரம், வர்த்தகம், ராணுவம், கலை, அறிவியல் தொழில்நுட்பம்,அணுசோதனை போன்ற 7 துறைகளிலும் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
சமீபத்தில் ரஷ்ய துணை பிரதமர் இலியா கிளபனோவ் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இந்தியாவின் அணு மின் சக்திக்கான அடிப்படைக் கட்டமைப்பில் 50சதவீத உதவியை ரஷ்யா வழங்கும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி, இதற்கான ஒப்பந்தம் ரஷ்ய அதிபர் வருகையின் போது கையெழுத்தாகும்.
இந்தியாவிலுள்ள தாராப்பூர் அணுமின்நிலையத்திற்கு எரிபொருட்கள் கொடுத்து உதவுவதற்கான ஒப்பந்தத்தில் ரஷியா முன்பே கையெழுத்திட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications