செந்தூரில் சேவல் கொடியோனின் சூரசம்ஹாரம்
சூரபத்மன் என்ற அசுரனை முருகக் கடவுள் சம்ஹாரம் செய்தது ஸ்ரீஸ்கந்த சஷ்டி யாககொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 02.11.2000, வியாழக்கிழமையன்று முருகன் கோவில்களில் சிறப்பாகஸ்ரீ ஸ்கந்த சஷ்டி கொண்டாடப்படுகிறது.
சூரபத்மன் என்ற அசுரன் கடுந் தவம் செய்து அரிய பல பலன்களைபெற்றிருந்தான்.அந்தப் பலன்களை தவறாக பயன்படுத்தி தேவர்கள் உள்ளிட்டவானவர்கள் அனைவரையும் கொடுமைப்படுத்தி வந்தான். சூரபத்மனை சம்ஹாரம்செய்ததை சூர சம்ஹார விழாவாக கொண்டாடுகின்றனர்.
அவனை அழிப்பதற்காக முருகன் தனது தாயாரான பராசக்தியிடம் வேல் வாங்கிக்கொண்டு, சூரபத்மனை அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்சந்தூரில் சம்ஹாரம்செய்தார்.
இந்த விழா எல்லா முருகன் தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
முருகன் பராசக்தியிடம் வேல் வாங்கியதே ஒரு வைபவமாக கொண்டாடப்படுகிறது.இருப்பினும், தஞ்சாவூர் மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் வேல் வாங்கும் வைபவம்குறிப்பிடத்தக்க ஒன்றாக நடக்கிறது.
சிக்கல் சிங்கார வேலன் சன்னிதியில், முருகன், தாயார் பராசக்தியிடம் ஆசி பெற்றுசூரனை சம்ஹாரம் செய்ய வேல் வாங்குவார். வேல் வாங்கும் போது முருகனதுதிருமுகம் வியர்க்கும் என்று கூறப்படுகிறது. இன்றும் வேல் வாங்கும் வைபவத்தின்போது முருகன் முகம் வியர்ப்பதை காண முடிகிறது என பக்தர்கள் கூறுகின்றனர்.
ஆனாலும் சூரபத்மனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்தது திருச்செந்தூரில்தான்.இங்கு சினம் கொண்ட முருகன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து தன் சினத்தைதணித்துக் கொண்டான். அதன் பின் சினம் தணிந்து கோயில் கொண்ட இடம்திருத்தணி. முருகன் கோபம் தணியப் பெற்ற திருத்தணியில் மட்டும் முருகனின் வேல்தலைகீழாக (வேலின் மேல் பாகம் தரையில் இருக்கும்) குத்தி வைக்கப்பட்டிருப்பதேசான்று.
இவ்வாறு, வேல் பெற்ற முருகன் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்யும் விழாஆண்டுதோறும் விமரிசையாக நடந்து வருகிறது. திருச்செந்தூர் கடற்கரையில் இதுநடைபெறும். சூரன் பல்வேறு உருவங்களை எடுத்துவர அனைத்தையும் முருகன்அழித்து இறுதியில் சம்ஹாரம் செய்வார்.
6 நாட்கள் போரிட்ட பின்னர் 7-வது நாள் சூரனை சம்ஹாரம் செய்வார் முருகன்.சூரபத்மன் இறுதியாக கடலின் நடுவே மாமர உருவம் எடுத்தான். முருகன் அதைஇரண்டாக பிளந்தார். அந்த மாமரம் மயிலாகவும், சேவலாகவும் உருமாறியது.மயிலை வாகனமாகவும், சேவலை கொடியாகவும் ஏற்று சூரனை மன்னித்து அவனுக்குவிஸ்வரூப தரிசனம் அளித்து அருள் பாலித்தார் முருகன்.
அங்குள்ள அர்ச்சகர்கள் உற்சவ முருகனிடமிருந்து வேலை வாங்கி சூரன் போல்வேடமணிந்துள்ள பொம்மையின் தலையை வெட்டி சம்ஹாரம் செய்வார்கள்.
சூர சம்ஹார விழா 7 நாட்கள் நடைபெறும். 7-வது நாள் சூர சம்ஹாரம் நடைபெறும்.இந்த 7 நாட்களும் பக்தர்கள் உப்பில்லாத உணவு சாப்பிட்டு விரதம் இருப்பார்கள்.சூரசம்ஹார தினத்தன்று கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை அருந்தி அந்த விரதத்தைமுடிப்பார்கள். பலர் கோவில்களிலேயே தங்கி விரதம் இருப்பதும் உண்டு.
தீய சக்தியை அழித்த தர்மத்தை நிலை நாட்டிய சூர சம்ஹார நாளில் முருகக் கடவுளைப்பூஜித்து அவர் அருளைப் பெறுவோம்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications