தமிழக வியாபாரிகளுக்கு ரூ. 2700 கோடி வரிச் சலுகை

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தமிழத்தில் வியாபாரிகளுக்கு ரூ. 2700 கோடி அளவுக்கு விற்பனை வரியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் இந்திய தொழில், வர்த்தக சபையின் வைர விழா மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில்,1996-ம் ஆண்டு முதல் கடந்த பட்ஜெட் வரையிலான கால கட்டத்தில் வியாபாரிகளுக்கு ரூ. 2700 கோடி வரை விற்பனை வரியிலிருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளது.

விற்பனை வரியில் சலுகைகள் அதிகம் கொடுக்கப்பட்டாலும் கூட அரசுக்குக் கிடைக்கும் வருவாயில் பெரும்பாலானவை விற்பனை வரி மூலமேகிடைக்கிறது.

தமிழகத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் ரூ. 23,000 கோடி வரைக்கும் ஏற்றுமதி நடந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதுரூ. 6600 கோடியாக இருந்தது.

தமிழகத்தில 1996-ம் ஆண்டு சாப்ட்வேர் நிறுவனங்கள் 34 ஆக இருந்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இது 582 ஆக உயர்ந்துள்ளது.

தொழில் முதலீட்டில் தமிழகம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் அவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+