Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவுடன் சேர்ந்து விட்டது பா.ம.க ..வாழப்பாடி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

அதிமுகவுடன் மனதளவில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்து விட்டது என்று தமிழகராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.

வாழப்பாடி ராமமூர்த்தி திருச்சியில் நிருபர்களை சந்தித்தார். நிருபர்கள்கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,

கேள்வி: ராமதாஸ் அ.தி.மு.க. அணிக்கு போய் விடுவார் என்று கூறப்படுகிறதே?

பதில்: பத்திரிக்கையில் வந்த செய்தியை நானும் படித்தேன். இது பற்றிய செய்திகள்கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே வருகின்றது. ஆனால் இந்த பத்திரிக்கைசெய்தியின் யூகங்களுக்கு பா.ம.க. மறுப்பு தெரிவிக்கவில்லை.

நான் முன்பே கூறியபடி மனதளவில் அ.தி.மு.க. அணியுடன் பா.ம.க. சேர்ந்து நிறையமாதங்கள் ஆகி விட்டது. எனவே இந்த செய்தி அதிர்ச்சி அடையச் செய்யவில்லை.

கேள்வி: ராமதாஸ் அ.தி.மு.க. அணிக்கு சென்றால் தேசிய ஜனநாயக கூட்டணியின்வெற்றி பாதிக்குமா?

பதில்: என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியின்வெற்றி வாய்ப்பு மற்றும் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு எந்த நிலையிலும்பாதிக்கப்படாது. காரணம் தேர்தலுக்கு நீண்ட நாள் உள்ளது.

எந்த அணியில் எந்த கட்சிகள் இருக்கும். இரண்டு அணிகளா? அல்லது நான்குஅணிகளா? என்று இப்பொழுது சொல்வதற்கு இல்லை.

ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து யார் விலகினாலும் அதன் வெற்றிபிரகாசமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் தி.மு.க. அரசு தேர்தலில் சாதனைகளைசொல்லி ஓட்டு கேட்பதை மக்கள் நம்புவார்கள்.

ஆனால் அ.தி.மு.க. தனது வேதனைகளை மக்களிடம் சொல்வார்கள். அ.தி.மு.க.வால்புதிதாக எதுவும் சொல்லிவிட முடியாது.

தமிழக மக்களின் வரிப்பணம் அ.தி.மு.க.வின் ஊழல், ஜெயலலிதாவின் ஊழல்காரணமாக பல்வேறு நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஊழல் பணம்இங்கிலாந்து சென்றது. இப்போது சிங்கப்பூர், மலேசியாவுக்கும் சென்றுள்ளது.

இந்த சாதனை வேண்டும் என்று அ.தி.மு.க.வினர் சொல்வார்களா? எனவே மக்களிடம்சொல்வதற்கு அ.தி.மு.க. வினரிடத்தில் எந்த முகாந்திரமும் இல்லை.

கேள்வி: டான்சி நில ஊழலில் ஜெயலலிதாவுக்கு மூன்று வருட தண்டனை கிடைத்ததன்மூலம் தேர்தலில் நிற்க முடியாது என்று கூறப்படுகிறதே?

பதில்: தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் போதே கடந்த 98-ம் வருடம் எம்.பி.தேர்தலில் இருந்து தேர்தல் கமிஷன் புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

அதன் அடிப்படையில் சத்ய பிரமாண வாக்குமூலம் அடிப்படையிலும் ஏற்கனவேகிரிமினல் வழக்கில் தண்டனை பெற்றோர் என்பது பற்றியோ எத்தனை வருடம் சிறைஎன்பது பற்றியோ அது நிலுவையில் உள்ளதா, மேல் முறையீட்டில் உள்ளதா என்பதுகுறித்து விபரம் கொடுத்தாக வேண்டும்.

எனவே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் வேட்புமனுவை சாதாரணதேர்தல் அதிகாரியே நிராகரிக்கலாம்.

உச்ச நீதிமன்றம் ஜெயலலிதா குற்றம் அற்றவர் என்று அறிவிக்கும் வரையில்ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது என்று வாழப்பாடி ராமமூர்த்தி கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+