லாரி, வேன், கார், பைக் மோதலில் 3 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் நான்கு வாகனங்கள் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3பேர் இறந்தனர்.
புதன்கிழமை இரவு எலஹங்கா-பெல்லாரி சாலையில் இந்த விபத்து நடந்தது.சாலையில் வேகமாக வந்த லாரியொன்று,சென்று கொண்டிருந்த கான்டர் வேன்,அம்பாசடர் கார், ஒரு இரண்டு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில், காரில் பயணம் செய்து கொண்டிருந்த ஜெயஸ்ரீ (30), அவரது கணவர் சம்பத்குமார் (36), பிரேமலட்சுமி (60) ஆகியோர் உயிரிழந்தனர்.
விபத்தில் மூன்று வயது பையனும், இன்னொரு பயணியும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இவர்களை போலீஸார் பத்திரமாக மீட்டனர்.
பயங்கரமான விபத்துக்குக் காரணமான லாரி டிரைவர் தப்பி விட்டார். அவரைபோலீஸார் தேடி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications