பொள்ளாச்சியில் கூடுகிறது பா.ஜ.க. பொதுக்குழு
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்:
தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டங்கள் வரும் 4 ம் தேதி முதல் பொள்ளாச்சியில் நடக்கிறது.
செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் இரண்டு நாட்கள் நடக்கும். இதையடுத்து 5 ம் தேதி பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர் பங்காருலட்சுமணன் மற்றும் துணைத் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது.
இதில் கட்சியின் மாநில தலைவர் கிருபாநிதி, பொதுச்செயலாளர் இல.கணேசன் மற்றும் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஒ.ராஜகோபால்ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications