பஞ்சாலைத் தொழிலர்கள் ஸ்டிரைக்கில் இறங்குகிறார்கள்
கோவை:
போனஸ் வழங்கக் கோரி பஞ்சாலை தொழிலாளர்கள் வரும் அக்டோபர் 19-ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தத் தீர்மானித்துள்ளனர்.
கோவை, ஈரோடு பஞ்சாலைத் தொழிலாளர்கள் சங்கத்தின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் கோவையில் நடந்தது. மறுமலர்ச்சித் தொழிலாளர் சங்கத் தின்தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
பஞ்சாலைத் தொழிலாளர்கள், மில் உரிமையாளர்களுடன் நடத்திய முதல் சுற்று தீபாவளிப் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வியடைந்து விட்டது. இதனையடுத்துகூட்டு நடவடிக்கை குழு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
தொழிலாளர்களுக்கும், பஞ்சாலைத் தொழிலதிபர்களுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிக்க தென்னிந்திய மில்கள் சங்கம்மறுத்து விட்டது. இந்த சங்கம், தீபாவளிப் போனஸ் பிரச்னையில் தலையிடாததை தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கை குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
எனவே, பஞ்சாலைத் தொழிலாளர்கள் பிரச்னையில் அரசு தலையிட்டு சுமூகமான முடிவெடுக்க உதவ வேண்டும். போனஸ் பிரச்னைக்கு உடனடித் தீர்வுகாணக் கோரி வரும் அக்டோபர் 8, 9, 10 ஆகிய தேதிகளில், மில்களின் முன்பு கூட்டம் நடத்தப்படும்.
இதனையடுத்து, 12 மற்றும் 13ம் தேதிகளில் கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பேரணி நடத்தப்படும். இப் பிரச்னைக்கு தீர்வுஏற்படாவிட்டால், இதனையடுத்து அக்டோபர் 19ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.
அக்டோபர் 11ம் தேதி மீண்டும் கூட்டு நடவடிக்கை குழு கூடி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கும் போன்ற தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications