அசார், அஜய் சர்மாவுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்கிறது சிபிஐ
டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான சிபிஐ விசாரணை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் மற்றும் முன்னாள் வீரர் அஜய் சர்மாஆகியோருக்கு எதிரான ஆதாரங்களை சிபிஐ மதிப்பிட்டு வருகிறது.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் 5 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும் இவர்களில் அசாருதீன், அஜய் சர்மா இருவரும் அரசுஊழியர்களாக உள்ளனர். இதையடுத்து அவர்கள் மீது ஊழல் வழக்குத் தொடரும்முயற்சியில் சிபிஐ இறங்கியுள்ளது.
மேலும், அந்த வழக்குத் தொடருவதற்கு முன் சட்ட நிபுணர்களிடம் சட்ட ஆலோசனைகேட்பதற்காக அசார் மற்றும் அஜய் சர்மா ஆகியோருக்கு எதிரான ஆதாரங்களைமதிப்பிட்டு வருவதாக சிபிஐ இணை இயக்குநர் ஆர்.என். சவானி தெரிவித்தார்.
சட்ட நிபுணர்களிடமிருந்து ஆலோசனை பெறப்பட்ட பிறகு அசார் மற்றும் அஜய் சர்மாமீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றார் அவர்.
மேட்ச் பிக்ஸிங் என்ற மிகப் பெரிய குற்றச்சாட்டை விசாரிக்கும் பொறுப்பை ஏற்றுஅதைத் திறம்படி முடித்துவிட்டோம். அறிக்கை இப்போது வெளியிடப்பட்டுள்ளநிலையில், கிரிக்கெட் வீரர்கள் மீது தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களைமக்கள் தெரிவிக்கலாம்.
மேலும், அந்த ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படுவதிலிருந்து தடுக்கப்படும்.
கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தாவிடம் விசாரணை நடத்தியபோது அவர்தெரிவித்த தகவலின் அடிப்படையில்தான் கிரிக்கெட் வீரர்கள் மீது மேட்ச் பிக்ஸிங்குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது என்பது தவறு.
6 மாத கால விசாரணையின்போது சுமார் 207 கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மற்றும்புக்கிகளிடம் நாங்கள் விசாரித்தோம். அதன்பிறகுதான் நாங்கள் ஒரு முடிவுக்குவந்தோம்.
அதே நேரத்தில் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிலேயே மிக முக்கியமான முகேஷ் குப்தாதெரிவித்த தகவல்களின் அடிப்படையிலும் கிரிக்கெட் வீரர்கள் மீது நாங்கள் குற்றம்சாட்டியுள்ளோம்.
மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள், அன்னியச் செலாவணி மோசடியிலும்ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. அது பற்றி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள்விசாரணை நடத்துவார்கள் என்றார் சவானி.ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications