கலகக் கும்பலால் பிடிக்கப்பட்ட 5 பிஜி ராணுவ வீரர்கள் விடுதலை
சுவா:
பிஜியில் வியாழக்கிழமை காலை புரட்சிக் கும்பால் துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்ட 5 ராணுவ அதிகாரிகள்விடுவிக்கப்பட்டனர்.
ராணுவ தலைவர் பிராங் பெய்னிமாராவின் உத்தரவுப்படி, ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி ராணுவத் தலைமையகத்தில் பிணைக்கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்ட 5 ராணுவ அதிகாரிகளையும் மீட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் ஹோவர்டு பொலிடினி கூறியதாவது:
ராணுவ அதிகாரிகள் தங்கியிருக்கும் குயின் எலிசபெத் மாளிகையில், புரட்சிக் கும்பல் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதையடுத்து தலைநகர் சுவாவில்பதட்டம் ஏற்பட்டது.
இதில் 5 ராணுவ அதிகாரிகள் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது 30 க்கும்மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு தப்பி விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களைத் தேடும்முயற்சியில் பிற ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நகரின் முக்கியச் சாலைகளில் ராணுவ வீரர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள். ராணுவ அதிகாரிகள்தங்கியிருக்கும் குயின் எலிசபெத் மாளிகை வளாகத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தலைநகர் சுவாவிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நபோவா பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கலகத்தில் தொடர்புடைய 3 பேர் நசோரி விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கிச் சூடு நடத்தி கும்பலைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார்தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
நகரின் முக்கியச் சாலைகளில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் ரோந்து சுற்றி வருகின்றனர். வியாழக்கிழமை இரவு 8 மணிக்குள்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார்.
பிஜி தீவின் இடைக்கால பிரதமர் லைசோனியா குவாரசே கூறுகையில், புரட்சிக்காரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய பகுதிகளிலும், ராணுவ நடவடிக்கைமையத்திலும் ராணுவ வீரர்கள், தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.
நாட்டின் அரசியில் ஸ்திரத்தன்மைக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் ஏற்படாதவாறு அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கும். திடீரென்றுஏற்பட்ட இந்த கலகத்தை ராணுவம் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரும். வியாழக்கிழமை இரவுக்குள் சுவாவில் சகஜ நிலை திரும்பும் என்றார்.


Click it and Unblock the Notifications
