ஊட்டியில் மனித உரிமை கமிஷன் விசாரணை
ஊட்டி:
முன்னாள் நீதிபதி ரத்தினசாமி தலைமையிலான மனித உரிமைக் கமிஷன் குழு நீலகிரிமாவட்டத்தில் நான்கு நாள் விசாரணையைத் துவக்கியது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் குறித்து விசாரணை செய்யமுன்னாள் நீதிபதி ரத்தினசாமி தலைமையிலான மனித உரிமைக் கமிஷன் நீலகிரிவந்துள்ளது. இந்த கமிஷன் ஊட்டியில் உள்ள தமிழக இல்லத்தில் தங்கி விசாரணைமேற்கொள்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் தேயிலைக்கு விலை கோரி பல்வேறுபோராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது கடந்த சில மாதங்களுக்குமுன்பு நீலகிரியில் பஸ் எரிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு பின்னர் மீண்டும் கலவரம்தொடங்கியது. விவசாயிகள் போராட்டம் ஆரம்பித்தனர்.
இதனை அரசு தீவிரமாகத் தடுக்க நினைத்தது. இதையடுத்து சாலை மறியலில்ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸ் தடியடி நடத்தியது. இதில் பலர் காயமடைந்தனர்.
மேலும் சில இளைஞர்கள் அரை நிர்வாணமாக அழைத்து வரப்பட்டனர். இது குறித்துமனித உரிமை கமிஷனில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் புகாரை விசாரிக்க தமிழ்நாடு மனித உரிமைக் கமிஷன் உறுப்பினரும் ஓய்வு பெற்றநீதிபதியுமான ரத்தினசாமி ஊட்டி வந்தார். அவர் தமிழகம் இல்லத்தில் தங்கிபாதிக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
இந்த விசாரணையின்போது அரை நிர்வாணமாக அழைத்து வரப்பட்ட 8 இளைஞர்கள்,மற்றும் லத்தி அடி வாங்கிய பெண் ஆகியோரிடம் விசாரணை நடத்துகிறார்.
மேலும், சாலை மறியலைத் தடுக்க போலிசார் வீடு புகுந்து இளைஞர்களைவலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்தது குறித்தும் விசாரணைமேற்கொள்ளப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக நவம்பர் முதல் தேதியில் ஸ்ரீதர் (22), பாபு (23) ஆகிய இரண்டுஇளைஞர்கள் விசாரணை செய்யப்பட்டனர். இவர்கள் சார்பில் அட்வகேட்அனந்தகிருஷ்ணன், ரவிக்குமார் ஆகியோர் வாதிட்டனர்.
சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த சிவகங்கை எஸ்.பி. முருகேஸ்வரன், டி.எஸ்.பி. லலிதா லட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் திருமேனிஆகியோரும் விசாரிக்கப்படுகின்றனர்.
இவர்கள் சார்பில் வாதிட நீலகிரி மாவட்ட வக்கீல்கள் யாரும்முன் வரவில்லை. போலீஸ்சார்பாக யாரும் வாதிடக் கூடாது என நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கம் எடுத்த முடிவால்வக்கீல் யாரும் வாதிடவில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications