பிஜியில் மீண்டும் புரட்சி?
சுவா:
பிஜியில் ராணுவ நிலைகள் மீது புரட்சிக்காரர் ஜார்ஜ் ஸ்பைட்டின் ஆதரவாளர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 ராணுவ அதிகாரிகள்காயமடைந்தனர்.
பிஜித் தீவில் இந்திய வம்சாவளி பிரதமர் மகேந்திர சவுத்ரி தலைமையிலான ஆட்சி நடந்து வந்தது. சவுத்ரி இந்தியர் என்பதைக் காரணம் காட்டி ஜார்ஜ்ஸ்பைட் தலைமையிலான குழு சவுத்திரியை புரட்சி மூலம் சிறை பிடித்தது.
இறுதியில் சவுத்ரி விடுவிக்கப்பட்டார். ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. ஸ்பைட் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த நிலையில், வியாழக்கிழமை காலைதலைநகர் சுவாவில் ராணுவ அதிகாரிகள் தங்கியிருக்கும் பகுதிகளில், ஸ்பைட் ஆதரவு குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு ராணுவஅதிகாரிகள் காயமடைந்தனர்.
எதிர்பாராத இந்த தாக்குதலினால், 30 க்கும் மேற்பட்ட ராணுவ அதிகாரிகள் உயிர் தப்புவதற்காக அங்கிருந்து அகன்று விட்டனர். குடியிருப்புவளாகத்தில் இருந்த பாதுகாவலர்கள் என்ன நடக்கிறது என்று உணர்ந்து கொள்ள முடியாமல் ஸ்தம்பித்து நின்றனர். ராணுவ வீரர்களும் பதில் தாக்குதலில்ஈடுபட்டனர்.
புரட்சித் தடுப்புப் பிரிவைச் வீரர்கள் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. துப்பாக்கிச்சூடு குறித்து தலைநகர் சுவாவிலுள்ள,ஆஸ்திரேலியா தூதர் டெனிஸ் ரவுண்ட்ஸ் கூறுகையில், ராணுவ கமாண்டர் பிராங் பெய்னிமாரமாவை நீக்கும் முயற்சியில் இவர்கள் துப்பாக்கிச் சூட்டில்ஈடுபட்டிருக்கலாம்.
துப்பாக்கி சுடும் சப்தத்தை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கேட்டிருக்கிறார்கள். ரேடியோ செய்திகளும் துப்பாக்கிச் சூட்டை உறுதிப்படுத்துகின்றனஎன்றார்.
முன்பு, ஜார்ஜ் ஸ்பைட் புரட்சி நடத்தியபோது, இந்தப் படையினர்தான் அவருக்கு ஆதரவாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு புரட்சியை நடத்தும்முயற்சியாக இது இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
![]()
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications