சிறுமியை கற்பழித்துக் கொன்றவருக்கு தூக்கு
வேலூர்:
வேலூர் அருகே சிறுமியை கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்த கூலித்தொழிலாளிக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.
வேலூர் கொணவட்டம் கபூர் சாகிப் தெரு காளகோடி வீதியைச் சேர்ந்தவர் இம்தியாஸ்.இவரது மகள் ரஷிதா (5) துவக்கப்பள்ளியில் படித்து வந்தாள்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் லாலு என்ற லத்தீப் பாய் (40). இவர் கடையில் கூலிவேலை செய்து வந்தார். கடந்த 1999-ம் ஆண்டு ரம்ஜான் தினத்தன்று ரஷிதாவைசைக்கிளில் கடத்திச் சென்று கற்பழித்தார். பின்னர் அந்த சிறுமியை கிணற்றில் வீசிக்கொலை செய்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை செய்து லத்தீப் பாஷாவை கைது செய்தனர். அவர்மீது வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி தேவதாஸ், சிறுமியை கடத்தியகுற்றத்திற்காக 3 ஆண்டு சிறையும், கற்பழித்ததற்காக ஆயுள் தண்டனையும், குற்றத்தைமறைத்ததற்காக 2 ஆண்டு சிறையும், கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத்தண்டனையும் விதித்துத் தீர்ப்பு கூறினார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications