அலகாபாத் கும்ப மேளா .. ஜனவரியில் நடக்கிறது

Subscribe to Oneindia Tamil

அலகாபாத்:

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் ஜனவரி மாதம் நடக்கவுள்ள மகா கும்ப விழாவில், கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக மாநிலபோக்குவரத்துக் கழகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

மண்டலப் போக்குவரத்துக் கழக அதிகாரி உதய் ராஜ் இதுகுறித்துக் கூறுகையில்,

உத்தரப்பிரதேசத்தில் மில்லினியத்தின் முதல் மகா கும்ப விழா வரும் ஜனவரி 7 ம் தேதி முதல் பிப்ரவரி 8 ம் தேதி வரை நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக நாடு முழுவதிலுமிருந்து 7 கோடிக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு இடங்களிலிருந்து வரும் யாத்திரிகர்களின் வசதிக்காக, பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் விழா குறித்த அனைத்து விவரங்கள் அடங்கியபோஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக அவர்களுக்கு விழா குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப் படுகின்றன. மகா கும்பம் நடக்கும்இடங்களில் யாத்திரிகர்கள் தங்கும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய, 70 சுவிஸ் ரக விருந்தினர் இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகா கும்பம் நடக்கும் பகுதி தவிர , வித்யாச்சல், வாரணாசி, சாரணாத் மற்றும் ஆனந்தபவன் பகுதிகளுக்கும் யாத்திரிகர்கள் செல்லும் வகையில்போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.அலகாபாத் ரயில் நிலையத்தில் ஏற்கனவே விழாவை முன்னிட்டு தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுவிட்டது.

இங்கு தங்குபவர்கள் பணம் கொடுத்துத் தங்கி விட்டுச் செல்லும் வகையில் பேயிங் கெஸ்ட் வசதியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் மையத்தில் யாத்திரிகர்கள்பல்வேறு இடங்களுக்குச் செல்லும் வகையில் விளக்கப்படங்களும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளன என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+