திமுக கூட்டத்தில் அதிமுக கலாட்டா: அமைச்சருக்கு அடி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூரில் தி.மு.க.சார்பில் நடந்த கண்டனக் கூட்டத்தில் அமைச்சர்முல்லைவேந்தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
கருணாநிதியை ஆயுள் முழுவதும் சிறையில் அடைப்பேன் என சில நாட்களுக்கு முன்ஜெயலலிதா பேசியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டனக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த கண்டனக் கூட்டத்தில் அமைச்சர்பொங்கலூர் பழனிச்சாமிக்கும், தண்டபாணி எம்.எல்.ஏ.வுக்கும் இடையே நடந்ததகராறில் எம்.எல்.ஏ.வின் சட்டை கிழிக்கப்பட்டது.
இந்த நிலையில் தர்மபுரி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பாக அரூரில் மாநிலசெய்தித்துறை அமைச்சர் தலைமையில் கண்டனப் பேரணி நடந்தது.
புதன்கிழமை மாலை பேரணி முடிந்ததும், பேருந்துநிலையம் அருகே கண்டனப்பொதுக் கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில் அமைச்சர் முல்லை வேந்தன் பேசினார்.
அவர் பேசிக் கொண்டிருந்த போது அ.தி.மு,க.வினர் பலர் பொதுக்கூட்ட மேடையின்முன் பகுதிக்கு ஊடுறுவினர். அரூர் அ.தி.மு.க.மகளிரணிப் பிரமுகர் காவேரிஅமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அமைச்சர் போலீஸ் அதிகாரிகளை அழைத்து காவேரியை அமைதிப்படுத்துமாறுகேட்டுக்கொண்டார். அவர்கள் தாமத்ப்படுத்தியதால் அமைச்சர் தானே கீழே சென்றுஅவரை சமாதானப்படுத்த முயன்றார்.ஆனால் காவேரி அமைச்சரைத் தாக்கினார்.இதனால் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
காவேரியுடன் சேர்ந்து அ.தி..மு.க.வைச் சேர்ந்த அப்பாத்துரையும், முனியப்பனும்அமைச்சரைத் தாக்கினர். இதனால் அமைச்சரின் சட்டை கிழிந்தது. இதைமேடையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்துஅமைச்சரை காப்பாற்ற முயன்றன்ர். அந்த முயற்சியில் அவர்களுக்கும் அடி விழுந்தது.
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்து போலீசார் விரைந்து வந்து லேசான தடியடி நடத்திகும்பலைக் கலைத்தனர். அமைச்சர் மீது கல்வீச்சும் நடந்தது. அமைச்சர் தப்பிஅருகிலிருந்த தன் வீட்டிற்கு சென்றுவிட்டார், கூட்டம் பாதியில்நிறுத்தப்பட்டுவிட்டாலும் கல்வீச்சு தொடர்ந்தது.
அமைச்சர் முல்லைவேந்தன் தன்னை அவதூறாகப் பேசியதாகவும், தன்னைத்தாக்கியதாகவும் கூறி காவேரி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் சாலைமறியலில் ஈடுபட்டார்.
போலீஸ் உயர் அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்துவதா, அமைச்சரைசமாதானப்படுத்துவதா என திகைத்துப் போனார்கள். இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்படட்ன. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அமைச்சர் வீட்டிற்கு காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு முழுவதும் போலீஸ்ரோந்து பலப்படுத்தப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications