எங்கள் அணியே பலமானது.. கூறுகிறார் நல்லகண்ணு
ஓசூர்:
தமிழகத்தில் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு இல்லை. எங்களது அணியேபலமானதாக இருக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
மக்கள் கோரிக்கை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நல்லகண்ணு தர்மபுரி மாவட்டம்தேன்கனிக்கோட்டைக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோதுகூறியதாவது:
இதுவரை எங்கள் கட்சியின் சார்பில் அரசியல் மாநாடுகள் நடத்தி வந்தோம். இனிமக்களை பாதிக்கும் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளித்து மாநாடுகள்நடத்தவிருக்கிறோம்.
தி.மு.க. அரசின் பல நல்ல கொள்கைகள் இடைத்தரகர்கள் தலையீட்டால்நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
மத்திய அரசின் தாராளமயமாக்கல் கொள்கையால் சிறு தொழில்கள் நலிவடைந்துவிட்டன. மேலும் 1,249 தொழில்களுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுவிட்டது.இற்க்குமதி வரி குறைக்கப்பட்டுவிட்டது.
கேரளாவில் செய்வது போல் தமிழகத்திலும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல்நிறுத்தப்பட்டு முழுத் தேங்காய் கொள் முதல் செய்யப்பட வேண்டும்.
கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய 300 கோடிநிலுவைத் தொகையில் 20 கோடி மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மீதித் தொகைஉடனே கொடுக்கப்பட வேண்டும். தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியலில் எங்கள் கூட்டணி பலத்துடன் செயல்பட்டு வருகிறது. த.மா.கா.வும் எங்கள்கூட்டணி.யில் நீடிக்கிறது. ஏதேனும் பிரச்சனை வந்தாலும் பேசி தீர்த்துக் கொள்வோம்.எங்கள் கூட்டணியை முறிக்க பாரதீய ஜனதா கட்சி செய்யும் முயற்சிகள் பலிக்காது.
பாட்டாளி மக்கள் கட்சி எங்கள் கூட்டணியில் சேருமா என்பது குறித்துபொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனென்றால், முதல் நாள் கூறியதை மறுநாளே அவர் மறுத்துப் பேசி வருகிறார்.
தமிழகத்திற்கு இரண்டு அணிகள் போதும். மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லைஎன அவர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications