இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜான் ரைட் நியமனம்
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட்அணியின் கேப்டன் ஜான் ரைட் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய நேர்முகத் தேர்வுக்குப் பின் ஜான் ரைட்டுக்கு இந்தவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளரை நியமிப்பது என கிரிக்கெட் வாரியம்முடிவு செய்தது. இதையடுத்து பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்காக ஏ.சி.முத்தையா,துங்கார்பூர், தேசிய கிரிக்கெட் அகாதமியின் முதன்மை பயிற்சியாளர் ஹனுமந்த் சிங்,முன்னாள் இந்திய அணி கேப்டன் எஸ்.வெங்கட்ராகவன் ஆகியோர் அடங்கிய குழுநியமிக்கப்பட்டது.
இக்குழுவினர் நியூசிலாந்தின் ஜான் ரைட், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஜெப்மார்ஷ், கிரேக் சாப்பல் ஆகியோரிடம் நேர்முகத் தேர்வு நடத்தியது. இதன் இறுதியில்ஜான் ரைட் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பயிற்சியாளர் தேர்வு குறித்து கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ராஜ்சிங்துங்கார்பூர் கூறுகையில், எங்களது நிபந்தனைகளுக்கு மார்ஷ் ஒத்துக்கொள்ளவில்லை. சாப்பல் அதிக பணம் கேட்டார். எங்களது நிபந்தனைகளுக்கு ஜான்ரைட் ஒத்து வந்ததால் அவரையே பயிற்சியாளராகத் தேர்வு செய்தோம்.
சாப்பல் மற்றும் ரைட்டுடன் கடந்த சில நாட்களாக பேச்சு நடத்தி வந்தோம்.மார்ஷுடனும் கடந்த இரு நாட்களாக பேசி வந்தோம்.
இந்தியாவிலில் தங்கியிருந்து பயிற்சி அளிப்பதில் மார்ஷுக்கு சிரமம் உள்ளது.வருடத்தின் பெரும்பாலான நாட்கள், அணியுடனேயே இருக்க நேரிடும். ஆனால்,குடும்பத்தை விட்டு நீண்ட காலம் வெளியில் தங்க முடியாது என்று அவர்நினைக்கிறார். எனவே மார்ஷ் தேர்வு செய்யப்படவில்லை.
பயிற்சியாளர் தேர்வுக்கான ஒப்பந்தம் மற்றும் பிற விவரங்கள் குறித்து வாரியத்தலைவர் ஏ.சி.முத்தையா செய்தியாளர்களிடம் தெரிவிப்பார்.
ஜான் ரைட் பயிற்சியாளராகத் தேர்வு செய்யப்பட்டாலும் கூட வாரியத்தின்ஆலோசகராக மார்ஷ் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. முதலில் இந்தப்பொறுப்பில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் பாப் சிம்சன் இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications