"கூட்டணியில் பா.ம.க. நீடிப்பது கருணாநிதியைப் பொறுத்தது
சென்னை:
தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி நீடிப்பது முதல்வர் கருணாநிதி கையில் உள்ளது என்று பாமக நிறுவனர்டாக்டர் ராமதாஸ் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணியில் உள்ளது தமிழக ராஜீவ் காங்கிரஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி. இதில் தமிழகராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்திக்கும், எனக்கும் தகராறு ஏற்பட்டது.
இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் அடிக்கடி இதுகுறித்து விமர்சனம் எழுந்தது. இதை கருணாநிதி தலையிட்டு தீர்த்துவைக்காததால் அவர்மேல் எனக்கு அதிருப்தி ஏற்பட்டது வாஸ்தவம்தான்.
அதேபோல், பாண்டிச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் என் மேல் தாக்குதல் நடத்தினார்கள். இந்த இரண்டு சம்பவங்களாலும் பாட்டாளிமக்கள் கட்சி மற்றும் திமுக கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
திமுக கூட்டணியிலிருந்து விலகினாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி தொடரும். ஆனால் திமுக விலிருந்து பிரிந்துவருவது குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிக்கொண்டு காங்கிரசும், தமிழ்மாநில காங்கிரசும் சேர்ந்து போட்டியிடலாம். ஆனால் திமுகஅல்லது அதிமுக வுடன் கூட்டணி சேராமல் தேர்தலில் அதிக இடங்களைப் பெற முடியாது.
பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணியிலிருந்து விலக்கி விடுவார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் அப்படியிருந்தால் அவர்கள் அதற்கானகாரணத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும்.
பாண்டிச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் நான் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் பாண்டிச்சேரி பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர்மஞ்சினி உள்பட பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பல பாண்டிச்சேரி, கடலூரி, விழுப்புரம் உள்பட பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.இது குறித்து முழு விவரங்களையும் முதல்வர் கருணாநிதியிடம் சமர்பித்துள்ளோம். ஆனால் அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லைஎன்றார் ராமதாஸ்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications